Thursday, September 13, 2007

புதுச்சேரி, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் தந்தை பெரியார் 129-ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் திராவிடர் கழகத்தின் கோட்டைமேடு கிளை சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம், வரும் 17-09-2007 திங்களன்று அரியாங்குப்பம், கோட்டைமேட்டில் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்த நாள் வரும் 17-09-2007 திங்கள் அன்று தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பெரியார் தி.க. கோட்டைமேடு கிளை சார்பாக, தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் வரும் 17-09-2007 திங்கள் மாலை 6-00 மணிக்கு, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டத்திற்கு கோட்டைமேடு பெரியார் தி.க. பொறுப்பாளர் இரா.பெருமாள் அவர்கள் தலைமையேற்கிறார். ந.இரவி, சி.சிவமுருகன், ச.தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில இளைஞர் அணிச் செயலாளர் செ.சுரேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகின்றார்.

திரைப்பட நடிகர், கலைமாமணி திரு.குமரிமுத்து (தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க.) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுகின்றார்.

பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

மேலும் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி துணைத் தலைவர் இரா.வீராசாமி, பொருளாளர் வீரமோகன், செயலாளர் சு.விசயசங்கர், அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, இளைஞரணித் தலைவர் சா.சார்லசு, துணைச் செயலாளர் கோ.இராசேந்திரன், துணைச் செயலாளர் சிவராந்தகம் மு.சிவபெருமாள், மற்றும் பெரியார் தி.க.வின் பல்வேறு பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். நிகழச்சியின் இறுதியில் நன்றியுரை இரா.இராசசேகர் அவர்கள் கூற விழா நிறைவடைகிறது.

3 comments:

Anonymous said...

"திரைப்பட நடிகர், கலைமாமணி திரு.குமரிமுத்து (தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க.) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுகின்றார்."

இ இ இ இ யாயாயா ......................

Anonymous said...

பகுத்தறிவு கூட்டத்தில் காமிடி...

ஆஆஆஆஆஆஆஆஅ.............

Anonymous said...

thozha

special spaker now changed so change the date and specaker your bloger illango

special speaker: Senvendiran
Date ; 30.09.2007
place : Kottaimedu
time : 7.00 pm
bus root : Ariyankupam Cuddalore Road, near by PSCO BANK
OPP road.