
இலங்கையில், சிங்கள இராணுவம், ஈழத் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி கொல்லப்படும் கொடூர நிகழ்வை சித்தரிக்கும் வகையில் கோவை பெரியார் தி.க. சார்பில், 13-10-2008 திங்களன்று, காயக்கட்டு ஊர்வலம் நடைபெற்றது.
பெரியார் தி.க. பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டினன் தலைமையில் நடைபெற்ற இந்த உணர்ச்சிமிகுப் போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
ஈழத் தமிழர்கள படும் இன்னல்களை விளக்கும் விதமாக இப்போராட்டம் நடத்தப்பட்டது. காயங்களும், கட்டுகளுமாக கோவை நகரில் ஊர்வலம் வந்தது பொது மக்கள் பலரையும் ஈர்த்தது.
'தமிழ்நாடு முழுவதும் இது போன்ற போராட்டங்கள் நடத்தப்படும்" என பெரியார் தி.க. பொதுச்செயலாளர் தோழர் கோவை. கு.இராமகிருட்டினன் அறிவித்துள்ளார்.