புனைப் பெயர்களோடு
நடமாடிய
ஓர்
எழுத்து வியாபாரி
அரசியல் வியாபாரி
ஆன கதையிது.
மார்க்சியம் லெனினியம்
மாவோவும் படித்தேன்
மக்கள் போர்ப்படையில்
நானும் இருந்தேன்.
இப்படி
பேசும் புரட்சிகளின்
பட்டியலில்
நானும் ஒருவன்.
மக்கள் தலைவர்களை
மறுவாசிப்பு செய்ய
அவதாரம் எடுத்தேன்.
காரிலே சிறந்த கார்
அம்பேத்கர் - என்று
அண்ணலிடம் தொடங்கினேன்.
அகப்பட்டவர்கள் மீது
சேற்றை அடித்தேன்.
திருப்பி அடித்தவர்களிடம்
சரணடைந்தேன்.
அமைதி காத்தவர்களை
சாதிச் சொல்லி
மிரட்டி வைத்தேன்.
உண்மைத் தோழர்கள்
உதவியுடன்
இந்தியா டூடே வால்
மலம் துடைத்தேன்.
பார்ப்பான் அழைத்து
பக்கங்கள் கொடுத்ததால்
துடைத்த மலத்தில்
எழுதிக் குவித்தேன்.
சிதம்பரத்தில் கொடுமையா
போடு புத்தகம்
திண்ணியமா
போடு புத்தகம்.
களத்திற்குச் செல்லாமல்
பாதிப்பை
பக்கம் பக்கமாக
எழுதுவதை
பழக்கமாக்கிக் கொண்டேன்.
ஆவணப்படுத்துகிறேன்
என
ஆனதை
பதுக்கிக் கொண்டேன்.
சேரிகளின்
புரட்சிக் கூட்டத்தை
ஓட்டுப் பொறுக்க வைத்த
புண்ணியம் எனக்கே.
வெண்மணியில்
எரித்தவனோடு கூட்டணி
மேலவளவில்
அறுத்தவனோடு கூட்டணி
தோல்வியில் முடிந்தாலும்
எனக்கு வெற்றி.
கலைஞருடன் கூட்டணி
பேசச் சென்றேன்
காருடன் வந்தேன்.
மார்க்சியம் லெனினியம்
தலித் மக்களைக் கெடுத்ததென
சொல்லிச் சொல்லி
தலித் மக்களால் பிழைத்ததும்
நானே.
புதிய அவதூறு மூலம்
புறப்பட்டேன்.
தேர்தல் பாதை திருடர் பாதை
ஆனாலும்
எனக்கேதும் தடையில்லை
சுகமான பயணம்.
பெரியார் கொள்கை உயர்வில்லை
பெரியார் இயக்கம் சரியில்லை
வைக்கம் போர்
ஓர் புரட்டு
பொம்பள பொறுக்கிதானே
பெரியார்...
பார்ப்பன காசுடன்
கை கோர்த்து
உளரித் தீர்த்தேன்.
சங்கர மடத்தின்
செல்லப் பிள்ளையானேன்.
தலித் - பார்ப்பனக் கூட்டுக்கு
தரகு வேலை செய்து
பிராமின் டூடே பாராட்டு
பெற்றேன்.
புலிகளின்
எதிரிகளோடு கூட்டம் போட்டு
உளவுத் துறைக்குப் பயந்து
நடு நடுங்கிப் போனேன்.
தேர்தல் வந்தது
ஆரிய அம்மாவின்
அரவணைப்பில் தேறினேன்.
கவனிப்புக்கேற்ப
கட்டுரைகள் படைத்தேன்.
கருணாநிதி
கவனத்தைத் திருப்ப
திட்டித் தீர்த்தேன்.
எதிர்ப்பார்ப்பு முடிந்தது
சமரசமானேன்.
பலன் பெறவே
இயக்கம் சென்றேன்.
சொத்துக்களைக் காக்க
பதவி பெற்றேன்.
அதிகாரம் நிலைக்க
எதுவும் செய்வேன்.
இறுதியாய்...
எனக்கெதிராய்
கருப்பு நெருப்பே
நீ வந்தாலும்
உன்
இருட்டுப் பக்கங்களை
வெளிச்சமாக்கி
எழுதிக் குவிப்பேன்.
எண்ணிக் குவிப்பேன்.
எச்சரிக்கை
எனக்கு மாற்று
எங்கும் இல்லை
என்னை மீற
எவருமில்லை.