Friday, December 28, 2007

பார்ப்பன “இந்து”வின் சிங்களப் பாசமும்; தமிழினத் துரோகமும் ...

பார்ப்பன “இந்து” நாளிதழ் வழக்கம் போல் தனது துரோகக் குரலை மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளது. 25.12.2007 அன்றைய இந்து நாளிதழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவராக, உலகத் தமிழர்களின் காவலராக விளங்கி வரும் மாவீரன் பிரபாகரனுக்கு பின்னால் விடுதலைப் புலிகள் இயக்கம் என்னவாகும்? என ஓர் ஆராய்ச்சி (?) கட்டுரை வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் பார்ப்பன "இந்து" இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு, பரபரப்புச் செய்திகள் என பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் பார்பனத் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில், மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு புலிகள் இயக்கம் இல்லாமல் போய்விடட்டும் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு பினாமி மூலம் கட்டுரை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டில், தமிழன் பணத்தில் பத்திரிக்கை நடத்தி கொண்டு தமிழர் எதிரிகளிடம் "லங்கரத்னா" விருது பெரும் இந்து ராம் கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தலைவர் பிரபாகரனும் தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் - பார்ப்பானுக்கு எதிரி தேசம்” - என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் இந்து - ராம்களால் தமிழனின் வீரத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சிங்க இனவெறியை, அதன் பயங்கரவாதப் பதிவுகளைக் கண்டிக்கவோ, கட்டுரை எழுதவோ, மனம் வாராத தமிழ் நாட்டு அம்பிகளுக்கு, புலிகளின் வான்படை பயங்கரவாதமாகத்தான் தெரியும். நீங்கள் கட்டுரை மூலம் கக்கும் பார்ப்பன விஷத்தை, முறிக்கும் மருந்தை தந்தை பெரியார் எங்களுக்கு தந்து விட்டு போயிருக்கின்றார் என்பதை ஆரியக் கூட்டத்திற்கு அறிவுரையாகவே சொல்வோம்.

வன்னிக்காடுகளுக்குள் வாரிசு அரசியல், எப்படி உங்களால் எழுத முடிகிறது. மகள் சரசுவதியை புணர்ந்த பிரம்மாவின் பிள்ளைகள் தானே நீங்கள். உங்களால் எதுவும் முடியும். உங்களுக்கொன்றை சொல்லி கொள்கிறோம். தன் மகனையோ மகளையோ "போருக்கு" அனுப்பி வைக்கும் வரலாறு எங்களுக்குச் சொந்தம். உங்களுக்கு "ரூமுக்கு" அனுப்பி வைக்கும் வரலாறே சொந்தம்.

சார்லஸ் அந்தோணி - வான் புலிகளின் வைரம் பாய்ந்த நெஞ்சு. உனக்கு விருது வழங்கிய சிங்களவனிடம் கேள்! வான்புலிகள் வரலாறு, போர்களத்திற்குச் சென்றால் மந்திரி பதவி கிட்டாது, மரணமே. என் தம்பியின் வித்து, நாளைய ஈழவிடுதலையின் சொத்து. இது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. தமிழன் விதைத்ததை அறுவடை செய்தே பழக்கப்பட்டவர்கள் நீங்கள் உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

காஞ்சி மட சங்கரன்களின் சல்லாப லீலைகளைப் பட்டியலிட்டு தமிழ்நாட்டு ஊடகங்கள, பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டபோது. பார்ப்பன "இந்து" வின் வாயிலிருந்தது எது(?) சின்ன, பெரிய சங்கரன்கள் ஆற்றிய அருந்தொண்டுகளை (எழுத்தாளர் அனுராதரமணன், சொர்ணமால்யா உள்ளிட்டவர்களை கேட்டால் கூறுவார்கள்) இப்படி ஆய்வு செய்து வெளியிட்டிருந்தால் நாம் “இந்து”வின் நேர்மையை பாராட்டலாம். ஆனால், அவைகள் குறித்து இந்து ராம்களின் பேனா எழுத மறந்தது ஏன்?

உங்களை, உங்கள் ஆச்சாரங்களை, உங்கள் ஆதிக்கங்களை அராஜகங்களை பாதுகாக்க, நாறிப்போன, அருவெருக்கதக்க காஞ்சி மடம் உனக்குத் தேவை. அது களங்கப்படுவது உனக்கு கண்ணீரை வரவழைக்கும் என்றால், எம்மினத்தின் மான - அவமான வரலாற்றை மீட்டெடுக்கும் புலிகளும் எம் தலைவனும் எங்களுக்கு உயிரல்லவா? எங்கள் உயிரைக் களங்கப்படுத்தும் உங்களின் செயல்கள் ஒவ்வொன்றும் பதிவு செய்யப்படுகிறது எச்சரிக்கை.

ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நீங்கள் எங்கள் மன்னர்களுக்கு கூட்டிக்கொடுத்து பதவி பெற்றீர்கள். எங்கள் மன்னர்களை வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்து ஆட்சி, அதிகாரம் பெற்றீர்கள். நீங்கள் எதற்கும் துணிந்தவர்கள். மான-அவமானம் உங்களுக்கேது. ஆனால், எங்களுக்குண்டு.

எங்களின் இலக்கியம் வீரத்தையும், காதலையும் மட்டும் போற்றியது. உங்கள் இலக்கியமோ, காட்டிக் கொடுப்பதையும் கூட்டிக்கொடுப்பதையும் பரப்பியது. வரலாறு முழுக்க இது தானே. எங்கள் வரலாற்றில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள பிழைகளை, கழுவும் காலம் இது. தமிழின விடியலை தந்தை தொடங்கி வைத்தார், தம்பி முடித்து வைப்பார் எச்சரிக்கை.

ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி அதை மீண்டும் ஒரு முறை தினமலர்(ம்) நாளிதழ் நிருபித்துள்ளது. "இந்து" 25.12.2007 அன்று வெளியிட்ட கட்டுரையைத் தமிழில் மொழி மாற்றம் செய்து 27.12.2007 அன்று தினமலர் வெளியிட்டுள்ளது. ஏதோ தாங்களே சிறப்பு நிருபரை அனுப்பி ஆராய்ச்சி செய்து வெளியிட்டது போன்ற தோற்றத்துடன் இந்த கட்டுரையை தினமலர் வெளியிட்டு உள்ளது. சிங்களவன் தந்ததை தின்று, "இந்து" எடுத்த வாந்தியை அழகான குடுவையில் காட்சிக்கு வைத்து காட்டும் வித்தையை பார்ப்பன "தினமலர் " செய்துள்ளது.

உங்களுக்கொன்றை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றோம்.

"ஜாரின் கொடுமை லெனினை ஈன்றது
பார்ப்பனக் கொடுமை பெரியாரை ஈன்றது.
சிங்கள பேரினவாதம் தலைவர் பிரபாகரனைத் தந்தது.
வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்ற அறிவியலை நம்புகிறவர்கள் நாங்கள்.
பெரியாருக்கு பின்னால் தமிழ்நாடு எங்கள் காலடியில் என்று
இறுமாந்து இருந்தீர்கள்! ஏமாந்து போனீர்கள்!
பிரபாகரனுக்கு பின்னால் ஈழம் சிங்களவன் வசம்
எழுதுகிறீர்கள்! ஏமாந்து போவீர்கள்!

மாவீரன் பிரபாகரன் உயிரை ஓர் உடலில் தேடுகிறீர்கள். அது எட்டரை கோடி தமிழர்களின் உடலில் என்றோ கலந்து விட்டது.

பார்ப்பன - பரதேசிகளே! எழுதிக் கொள்ளுங்கள்...
நாளைய வரலாறு, தமிழின வரலாறு
உலகின் ஆதரவு விரைவில் கிடைக்கும்,
எங்கள் தமிழீழம் வரலாறு படைக்கும்.

Monday, December 24, 2007

பெரியார் என்ற பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு - படங்கள்!

மாநாட்டுத் தலைவரை ஊர்வலமாக அழைத்து வருதல்.

மாநாட்டில் கலந்துக் கொண்ட பெண்கள்.

Sunday, December 23, 2007

பெரியார் என்ற பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு!

மாநாட்டுத் தலைவரை ஊர்வலமாக அழைத்து வருதல். மாநாட்டில் கலந்துக் கொண்ட பெண்கள். சாதிப் பெயரை பெயருக்குப் பின்பு ஒட்டி அழைப்பது என்பது இந்நாட்டில் வெகுகாலமாக இருந்துவந்த வழக்கமாகும். அது ஒரு மரியாதையாகவும் பார்ப்பனிய சமூக அமைப்பில் கருதப்பட்டது. அந்தவகையில் தந்தை பெரியாரும் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்றே அழைக்கப்பட்டார். 'நாயக்கர்' என்றாலே அவரைத்தான் குறிக்கும் என்ற அளவிற்கு நிலைமை இருந்தது. குடி அரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் 18.12.1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25.12.1927 முதல் 'குடி அரசு' இதழ் நாயக்கர் பட்டத்தைக் கைவிட்டது. அதன்பின் அய்யா அவர்களைக் குறிப்பிடும் பொழுது 'பெரியார்" என்ற சொல்லைச் சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்றாலும் 'பெரியார்' என்பதை ஒரு மாநாட்டின் தீர்மானம் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்தாக வெளியானது என்பது, சென்னையில் நடைபெற்ற "தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில்" தான். அத்தகைய சிறப்புமிக்க மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பை இங்குப் பதிவு செய்கிறோம். 'தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு 5000 பெண்கள் விஜயம் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் வெளியில் நின்றிருந்தனர்' சென்னை 13.11.1938 முற்பகல் 1.00 மணிக்கு சென்னை பெத்துநாயக்கன்பேட்டை கிருஷ்ணாங் குளத்தையடுத்து காசி விஸ்வநாதர் கோயில் முன்பிருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் திருவாட்டி திருவரங்க நீலாம்பிகை என்ற நீலக்கண்ணியம்மையார், தோழர்கள் தாமைரைக்கண்ணியம்மையார், பண்டித நாராயணியம்மையார், டாக்டர் தருமாம்பாள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர் முகத்தம்மையார், கலைமகளம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ.ராமசாமி, தோழர் அ.பொன்னம்பலம் உள்ளிட்ட 5000-த்திற்கு மேற்பட்டவர் ஊர்வலத்தில் கலந்து வந்தனர். மாநாட்டுத் தலைவர், திறப்பாளர், வரவேற்புக் கழகத் தலைவர்களைக் கோச்சில் வைத்து அழைத்துவரப்பட்டது ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை ஏந்தி தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! தமிழ்ப் பெண்கள் வாழ்க! தமிழர் வாழ்க! என்ற கோஷங்களிட்டு வந்தனர். தமிழ்ப் பெண்கள் தமிழ் வாழ்த்துகள் பாடி வந்தனர். ஊர்வலத்தில் பெண்கள் மட்டிலும் 2000 பேர்கட்கு மேலிருந்தனர். ஊர்வலம் குப்பையா தெரு, தங்கசாலைத் தெரு, ஆதியப்ப நாயக்கன் தெரு. வால்டேக்ஸ் ரோடு ஆகியவைகளின் வழியாக வந்து, சரியாக 2 மணிக்கு மாநாட்டு கொட்டகையாகிய ஒற்றை வாடை நாடக கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. மாநாட்டு கொட்டகை ஊர்வலம் வரும் முன்பே கொட்டகையிலும், கொட்டகைக்கு வெளியிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். கொட்டகையில் ஒலிபெருக்கிக் கருவி அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் பெண்கள் 5000 பேர்கட்கு மேல் கலந்து கொண்டனர், மாநாட்டுக் கொட்டகை வாழைமரங்களாலும், கொடிகளாலும், வரவேற்பு வளைவுகளாலும் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியில் நிற்போர்கட்கும் கேட்குமாறு ஒலி பெருக்கி அமைக்கப்பட்டிருந்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியில் இருந்தே பேச்சுகளைக் கேட்டனர். முதலில் தலைவர், திறப்பாளர்களை வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. பின்னர் மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்கி திருவாட்டி மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் மூவரசர் தமிழ்க் கொடியை ஏற்றிவைத்தார். திருவாட்டிகள் சி. கலைமகள்பட்டு, தாமரைக்கண்ணியம்மையார், பார்வதியம்மையார் முதலியவர்கள் தமிழ்ப்பாட்டுக்கள் பாடினர், பின்னர், திருவாட்டி- திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை தலைமையேற்குமாறு வரவேற்புக் கழக தலைவர் கேட்டுக் கொண்டார். அதை ஆதரித்து திருவாட்டிகள் மூவாலூர் இராமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், இராணியம்மாள் (தோழர் அண்ணாதுரையவர்கள் மனைவி) ஆகியோர் பேசினர். டாக்டர் எஸ். தருமாம்பாள் மாநாட்டுத் தலைவருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுத்தார். தலைவர் தமது தலைமை பிரசங்கத்தை, ஆற்றினார், திருவாட்டி பார்வதியம்மையார் அவர்கள், ஈ.வெ.ரா. நாகம்மாள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். பின்னர் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேறின. - விடுதலை 14.11.1938. தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேறிய தீர்மானங்கள். சென்னை நவ14. ஆண்களில் தோழர்கள், தலைவர். ஈ.வெ.ரா., அ. பொன்னம்பலம், வேலூர் அண்ணல் தங்கோ, கனகசபை, குடந்தை ஜி.சுப்ரமணியம், எஸ்.ஏ.ரவூப், காஞ்சி பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார், சாமிஅருணகிரிநாதர், அ.சுப்பையாபிள்ளை, நகரதூதன் ஆசிரியர் மணவை திருமலைசாமி, சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி.பாலசுப்ரமணியன், பாரிஸ்டர் கே.சி. சுப்ரமணியம் செட்டியார், பல்லடம் பொன்னுசாமி, டாக்டர் சிற்சபை நடராசன், முருகேசன், தேவசுந்தரம், அரங்கநாதம், கணேசம், குமரகுரு, மாஜிமந்திரி எஸ்.முத்தையாமுதலியார், கோதண்டராம முதலியார் பி.ஏ.பி.எல்., சுந்தரராவ்நாயுடு பி.ஏ., பி.எல்., திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை, ரெவரெண்ட் அருள் தங்கையா, ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி நாதன், மாயவரம் சம்பந்தம், சிந்தாதிரிப்பேட்டை ராகவேலு, அமிர்தவாசகம் மணியர், காஞ்சி சி.பி.தண்டபாணி, டாக்டர் வானமாமலை, நெல்லையப்பபிள்ளை, பி.ஏ.பி.எல்., வேலூர் பி.பெரியசாமி முதலியார். ஷர்புதீன் சாகிப், கவுன்சிலர் ஆர். சுப்ரமணியம், பி. சிவசங்கரன், காஞ்சிபுரம் தங்கவேலு முதலியார், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார், (கடலூர்) கே.கே. ஆறுமுக முதலியார், இளஞ்சிய முதலியார், டி.வி. ஆதிசேஷ முதலியார், பண்டிட் எஸ்.எஸ் ஆனந்தம், கவுரவ மாஜிஸ்ட்ரேட் எம்.வரதராஜன், கயபாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கா ரெட்டியார், முத்துமல்லா ரெட்டியார், ஆர் என்.என் சாஸ்திரியார், வேலூர் புருஷோத்தமன், என். தண்டபாணி, நவசக்தி திரு.வி.உலகநாத முதலியார் ஆகியோரும் முக்கியமானவர்களாவர். மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டிதோழர்கள் எஸ்.ஆர்.கண்ணம்மாள், ஈ.வெ.கி. ரங்கநாயகி அம்மாள், வரகனேரி ஜபமாலை அம்மையார், மாத்தூர் விசாலாட்சி அம்மையார், ராமசுப்பையா விசாலாட்சி, அலமேலு மங்கைத்தாயாரம்மாள், திருப்பத்தூர் அன்னபூரணி-கந்தசாமி, சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமி வைரத்தம்மாள், அண்ணாமலை நகர் வித்துவான் செந்தமிழ் சச்சிகிருஷ்ணமூர்த்தி, மாஜி மந்திரி, சர்.பி.டி. ராஜன், தலைவர் எஸ்.எஸ் பாரதியார், குடந்தை ஆர்.கி.வெங்கட்ராம்நாயுடு, கே.கே. நீலமேகம், வாணியம்பாடி சண்முக முதலியார், எஸ்.வி.லிங்கம், மாயவரம் சபாபதி, திருவையாறு திருவள்ளுவர் மாணவர் சங்கத்தார் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். தலைவரால் கொண்டுவரப்பட்டு, பல பெண்மணிகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின. நிறைவேறிய தீர்மானங்கள் வருமாறு : - 1. இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்துவருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாததாலும் அவர் பெயரை சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் "பெரியார்" என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம் மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது. 2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும், வீண் ஆடம்பர செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது. 3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்று பட்டு ஒரு சமூகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாய் இருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம் மாநாடு ஆதரிக்கிறது. 4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம் மாநாடு கேட்டுக் கொள்வதுடன், பிற மொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாக பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்கக் கூடாதென தீர்மானிக்கிறது. 5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாக இருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது. அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமூகத்தை கேவலமான வார்த்கைகளால் கூறியதையும், தோழர் மு.இரா கவையங்கரர், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்டு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னை மீறிக்கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், அய்க்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம் மாநாடு தீர்மானிக்கிறது. 6. சென்னை லார்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் மதுரையில் காங்கிரஸ் மந்திரிகள் அரசாங்கத்தை நன்றாக நடத்தி வைக்கிறார்கள் என்று பேசியதைப் பார்த்தால், தங்கள் காரியம் நடந்தால் போதுமானதென்றம், பார்ப்பனரல்லாத தமிழர்கள் நிலை எப்படியானாலும் தங்களுக்குக் கவலையில்லை என்பதைக் காட்டுகின்றதாகையால், கவர்னர் அவர்களின் அவ்வபிப்ராயத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. 7. இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மாநாட்டிலும் கட்டாய இந்தியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டிக்கிறது! 8. இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும் பார்ப்பன அன்புபெற்ற தாய் மொழியறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்டமெனக் கருதுகிறது. 9. இம் மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீரமிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்துபார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. 10. இந்தியை எதிர்த்துச்சிறைசென்ற ஈழத்து சிவானந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.என் அண்ணாதுரை. எம்.ஏ. உள்ளிட்ட பெரியார்களையும், தொண்டர்களையும் பாராட்டுகிறது. 11. வகுப்புத் துவேஷக் குற்றம் சாட்டி 153 எ. 505 ஸி செக்ஷன்களின் கீழ் 18 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்று சிறை சென்ற தோழர் பி. சாமிநாதனை இம் மாநாடு பாராட்டுகிறது. 12. தோழர்கள் சண்முகானந்த அடிகளும். சி.டி. நாயகமும் சிறைசெல்வதை இம் மாநாடு பாராட்டுகிறது. 13. சென்னை நகர் தமிழ் நாடாதலாலும், தமிழர்கள் முக்கால் பாகத்து மேல் வாழ்ந்து வருவதாலும் இதுவரை முனிசிபாலிட்டியார் வீதிகளின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் விளம்பர பலகைகளில் போட்டு வந்திருக்க இப்போது புதிதாக தெருக்களுக்கு பெயர் போடுவதில் ஆங்கிலத்தில் மட்டும் போடப்பட்டு வீதிகளின் பெயர் தமிழில் போடமாமலிப்பதால் ஆங்கிலமறியாத மிகுதியான தமிழ்மக்கள் தெரு பெயர் தெரியாமல் தொல்லைப்படுவதை நீக்க தமிழிலும் வீதிகளின் பெயர் போடவேண்டுமென, சென்னை நகர சபையாரையும், மற்ற தமிழ்நாட்டு நகரசபைகளையும் இம் மாநாடு கேட்டுக் கொள்கின்றது. 14, சென்னை ரயில் நிலையத்தில் பீச், போர்ட், பார்க் என தமிழில் எழுதியுள்ளதை முறையே கடற்கரை, கோட்டை, தோட்டம் என தமிழில் எழுத வேண்டுமெனவும் அப்படியே ரயில் பயணச்சீட்டு (டிக்கெட்) களிலும் எழுத வேண்டுமெனவும் ரயில்வே கம்பெனியாரையும் சென்னை அரசாங்கத்தாரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 15. ஒரு அணா, நாலணா நிக்கல் நாணயங்களில் நாணயங்களின் மதிப்பைக் குறித்திருப்பதில் சுமார் மூன்று கோடிக்கு மேல் உள்ள தமிழ் மக்களுக்கு விளங்கும்படியாக தமிழிலும் குறிப்பிட வேண்டுமென அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது. 16. சென்னை அரசாங்க இந்திய மருத்துவப் பள்ளி சித்த வகுப்பில் நடைபெறும் பாடங்கள் ஒவ்வொன்றும் ஆங்கிலத்திலேயே பெரும்பாகம் நடைபெற்று வருவதை நிறுத்தி எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே நடத்த வேண்டுமெனவும், சித்த வகுப்பில் சேரும் மாணவர்கள் பள்ளிக் கூடப்படிப்பை ஆங்கிலத்தில் படித்து முடித்திருக்க வேண்டும் என்று கட்டாயாமிருப்பதை எடுத்து தமிழில் ஒரளவு இலக்கிய அறிவுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் சென்னை அரசாங்கத் தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது. 17. இந்திய மருத்துவப்பள்ளியில் சித்த மருத்துவ வகுப்புக்கு வேண்டிய பாடங்களில் உடற்கூறு, உடற்தொழில், கெமிஸ்ட்ரி என்னும் ரஸாயன நூல், மெட்ரியா, மெடிக்கா, பிள்ளைபெறுநூல், முதலியவை தமிழில் இருப்பதாலும், அதனை அச்சிட்டு மாணவர்கட்கும், மற்றவர்கட்கும் பயன்படும்படி செய்விக்க அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 18. மேற்கண்ட பாடபுத்தகங்களில் உடற்கூறு, கெமிஸ்ட்ரி, மெட்ரியா மெடிக்கல் முதலிய புத்தகங்கள் அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டவைகளை அரசாங்கத்தாருக்கு அச்சிடக்கொடுக்க இசைந்துள்ள சென்னை தென் இந்திய வைத்திய சங்கம் நிறுவியவரும், அமைச்சருமாகிய பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் அவர்கட்கு இம் மாநாடு நன்றி செலுத்துகிறது. 19. வியாபாரப் பத்திரிகைகளைப் போலல்லாமல் தமிழர் முன்னேற்றம் ஒன்றையே கருத்திற்கொண்டு பெரிய கஷ்டங்களுக்கிடையே ஒயாது உண்மையாய் உழைத்து வரும் விடுதலை, குடியரசு, நகர தூதன், பகுத்தறிவு, ஜஸ்டிஸ், சண்டே அப்சர்வர் முதலிய பத்திரிகைகளைத் தமிழ்ப் பெண்மணிகள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி படிக்க வேண்டுமாய் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது. 20. பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்தி வெளிவரும் 'ஆனந்தவிகடன்,' தினமணி, தமிழ்மணி முதலிய தமிழ்ப் பத்திரிகைகளைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது. 21கணவனை இழந்த இளம் பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது. 22. தமிழ்நாட்டில் 100-க்கு 95 மக்கள் கண்ணிருந்தும் குருடராய், தாய்மொழியில் கையெழுத்து போடத் தெரியாத நிலைமையில் இருக்கையில் சென்னை முதல் மந்திரியார் அதற்காவன செய்யாமல் அதற்கு மாறாக இந்தியை கட்டாயமாக செய்திருப்பதையும் அதனை கண்டிக்குமுகமாகத்தான் தமிழ்நாட்டுப் பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெருங் கூட்டங்கள் கூட்டி தெரிவித்தும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் பிடிவாதமாகயிருப்பதையும் இதைப்பற்றி தங்களுக்குள்ள மனக்கொதிப்பைக் காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்பவரை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. 23. தமிழ் மொழியைக் காப்பாற்றும் முறையில் இந்தியைக் கண்டித்து மறியல் செய்து சிறை புகுந்த வீரர்களுக்கு இம்மாநாடு மனமார்ந்த நன்றி செலுத்துகிறது, தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப் பெண்கள் நிலைமையை விவரித்தும் தோழர் ஈ.வெ.ரா ஒரு சொற்பொழிவாற்றினார். பின்னர் தீர்மானங்களை ஆதரித்தும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய நிலைமையை விளக்கியும் தோழர்கள் மீனாம்பாள் சிவராஜ், பண்டிதை ஆர். கண்ணம்மாள். கலைமகளம்மையார், இராமமிர்தத்தம்மையார், கமலாம்பாள், சிறுமி குஞ்சிதமணி, நீலாயதாட்சி, பண்டித திருஞான சம்பந்தம், சாமி சண்முகானந்தம் ஆர்.நாராயணி அம்மாள், மலர்முகத்தம்மையார், சாமி அருணகிரி நாதர், இராணி அம்மையார் (தோழர் அண்ணாதுரை மனைவி) தோழர் அண்ணாதுரை அன்னையார் ஆகியோர் பேசினர். தலைவர் முடிவுரைக்குப் பிறகு தோழர் வ.பா. தாமரைக்கண்ணம்மையார் நன்றி கூறினார். தோழர்கள் பார்வதியம்மையார், தாமரைக்கண்ணம்மையார்வாழ்த்துப் பாடினர். இரவு 9 மணிக்கு தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! பெண்ணுலகு தழைக்க என்ற பேரொலிகளிடையே மாநாடு இனிது முடிவுற்றது. - விடுதலை 16.11.1938. சிறைக்கு அனுப்பிய மாநாடு 13.11.1938 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிலும் மறுநாள் சென்னை பெத்து நாயக்கன் பேட்டையில், இந்தி எதிர்ப்புப் போரில் சிறைசென்ற பெண்களைப் பாராட்டியும் பெரியார் பேசிய உரை, பெண்களைப் போராடத் தூண்டியது என்று கூறி, பெரியார் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ள வேண்டியவைகளில் முதன்மையானது.

Sunday, December 16, 2007

இராமாயணம் எதிர்ப்பு – சட்டப் போராட்டம்.

இராமர் பாலம் - கற்பனை, புளுகு மூட்டையுடன் தமிழகத்தில் நுழைந்து அரசியல் செய்ய முயன்ற பார்ப்பனக் கூட்டத்தினர், தமிழக முதல்வர் கலைஞரின் கள நடவடிக்கைகளை, கருத்தியல் நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியாமல், நீதிமன்றம் என்ற பாதுகாப்பு வளையத்தில் பதுங்கிக் கொண்டு, வேறு வழியில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனிடையே, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில், தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் (Ramayan a True Reading 1957) “சச்சி இராமாயன்” என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையாவதை உ.பி முதல்வர் மாயாவதி தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் "சச்சி இராமாயண்" - நூலை எரிக்க தனது தொண்டர்களுக்கு ஆணைப் பிறப்பித்துள்ளார். வரலாற்று அறிவு சிறிதும் இல்லாத இந்த பார்ப்பன பா.ஜ.க. கூட்டமே தந்தை பெரியார் எழுதிய "சச்சி இராமாயண்” நூலின் வரலாற்றை தெரிந்துக் கொள்.

தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் Ramayan a True Reading 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் கான்பூரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ் என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ. 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச் சுட்டிகாட்டி இ.பி.கோ. 99 ஏ பிரிவின் படி தடை உத்தரவு செல்லாது என்று பார்ப்பன பண்டார கூட்டங்களுக்குப் பதிலடி தந்தது.

பார்ப்பன-ஆர்.எஸ்.எஸ். கும்பல் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உத்தர பிரதேச அரசுக்கு நெருக்குதல் கொடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வைத்த்து. அப்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், உத்தரபிரதேச அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து "சச்சி இராமாயண்" நூலை வழக்கம் போல் விற்பனைச் செய்யலாம், பதிப்பிக்கலாம், எதற்கும் தடையில்லை என்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் (17.9.1976) வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். இத்தீர்ப்பை, நெருக்கடி கால தணிக்கை அதிகாரிகள் "விடுதலை" நாளிதழில் வெளியிட அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தந்தை பெரியாரின் கருத்துக்கள் எத்தனை வலிமை வாய்ந்தது என்பதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு ஒன்று போதும். பார்ப்பன - பா.ஜ.க. கும்பல் வார்த்தைகளை வெளியிடும் முன்னர், வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும். தீர்ப்பின் தமிழாக்கம்:

"இராமாயணப் பாத்திரங்கள்"/ "சச்சி இராமாயண்" மீது

தடை செல்லாது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! - 17.09.1976.

நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்

சில வழக்குகள் சமுதாய ஒழுங்கீன முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டதாக முகப்பிலேயே இருக்குமென்றாலும், ஜனநாயகத்தின் அடிப்படையான சுதந்திர உரிமைகளை அசைக்கும் வழக்காக இந்த வழக்கு அமைந்துள்ளது.
இந்த மேன் முறையீட்டு வழக்கானது உத்திரப்பிரதேச அரசு பிரிவு 99 ஏ குற்ற விசாரணை முறையீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தையும் அரசியல் மேதையுமான பெரியார் (ஈ.வெ.ரா) அவர்களின் இராமாயணத்தை (Ramayan a True Reading 1957) ஆங்கிலத்திலிருந்து இந்திப் பதிப்பாக்கிய புத்தகத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணை சம்பந்தப்பட்டதால் உயர்நீதிமன்றத்தின் தனி அனுமதி பெற்று வந்திருக்கிறது.

உத்திரப்பிரதேச அரசின் முறையீட்டுப்படி இந்தப் புத்தகமானது வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு இந்திய குடிமக்களின் ஒரு பகுதியாகிய இந்துக்களுடைய உணர்ச்சிகளின் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டுமென்று வெளியிடப்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 295 பிரிவு (ஏ) பிரகாரம் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றம் ஆகும். இந்த அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கை சம்பந்தப்பட்ட புத்தகத்தின் ஆங்கில, இந்திப் பதிப்புகளில் குறிப்பிட்ட பக்கம், வரிகளில் உள்ள செய்திகள் சமுதாயத்தின் ஒழுக்க உணர்ச்சிகளைத் தகர்ப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளரான எதிர்மனுதாரர் உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்து கொண்டதன் பேரில், அரசின் அறிவிப்பு ஆணையை நீதிபதிகளின் குழு ஒன்று செல்லுபடியாகாதென தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேச அரசு உயர்நீதிமன்றத்தின் தனி உரிமை பெற்று வழக்கை அதன் வழக்கறிஞரைக் கொண்டு முறையிட்டது. வழக்கறிஞரின் வாதப்படி அரசின் அறிவிப்பாணை செல்லும்படி ஆகக்கூடியது எனவும், தள்ளுபடி செய்யப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லை எனவும், இந்தப் புத்தகமானது பெரும்பான்மையான இந்துக்களின் புனித உணர்ச்சிகளைப் புண்படுத்துவதாகவும், கடவுள் அவதாரங்களான இராமன், சீதை மற்றும் ஜனகன் முதலியோர்களை இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உயர்நீதிமன்றம் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்புப்படி அரசின் அறிவிப்பு ஆணையை பிரிவு 99 ஏ குற்றமுறை விசாரணை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை அரசு தெளிவாக்கவில்லை என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அரசுக்கு எதிரிடையாக தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

பறிமுதல் செய்வதற்கான விளக்கம்

குற்றமுறைப் பிரிவு 99 ஏ தெளிவாக ஆராயப்பட்டால் அரசின் அறிவிப்பாணையின் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். சட்டத்தின் கூறுகளை உற்று நோக்குங்கால், புத்தகம் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை, மூன்று தலைப்புகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அச்சட்டத்தின் பிரகாரம் எந்த ஒரு ஆவணமோ எந்த ஒரு செய்தியை உள்ளடக்கியிருந்தாலும், அந்தச் செய்தியானது இந்திய குடிமக்களிடேயே வேற்றுமை உணர்ச்சிகளை வளர்க்கும் விதத்திலோ, பகைமையை வளர்க்கும் விதத்திலோ இருந்தாலும், சம்பந்தப்பட்ட அரசின் கருத்தானது அவற்றை பறிமுதல் செய்யப்படுவதற்கான காரண விளக்கங்களை கொண்டிருப்பதாக இருக்கவேண்டும். அதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாநில அரசு அறிவிப்பு ஆணையின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென உத்தரவு இடவேண்டும்.

சட்டத்தின் மூன்றாவது பிரிவாகக் காட்டப்பட்டுள்ள செய்தி விளக்கங்கள் அறிவிப்பு ஆணையில் தரப்பட்டுள்ளன என்பதனை முடிவு செய்தல் வேண்டும். உயர்நீதிமன்றம், அரசின் ஆணையில் இந்த விளக்கங்கள் தரப்படவில்லையென தள்ளுபடி செய்யப்பட்டதானது சரியில்லை என அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வாதித்து, அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் அது விளக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

நம் விருப்பத்திற்கேற்ற சட்ட விளக்கம் முறை அல்ல

மேலும் அவர் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட புத்தகத்தின், சம்பந்தப்பட்ட பக்கங்களில் உள்ள வரிகள் பறிமுதல் செய்யப்படுவதற்கான போதுமான விளக்கங்களோடு இருப்பதால் அரசின் அறிவிப்பு ஆணையில் இடப்பட்டுள்ள விளக்கம் தேவையில்லை எனவும், தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.

அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கையில் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்கள் கூறப்பட்டு இருப்பதால் அதுவே சட்டத்தின் மூன்றாவது பகுதியைப் பூர்த்தி செய்வதாக அமைகிறது. ஆகவே, சம்பிரதாய முறைப்படி தனி விளக்கம் கூறுவது தகுதியானது அல்ல என்றும், எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் எடுத்துக்காட்டிய சட்ப்பிரிவுகளில் விளக்கங்கள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தி கூறப்பட்டிருப்பதின் காரணமாக, அவற்றை நிராகரித்துவிட்டு நம் விருப்பத்திற்கு உட்பட்ட வகையில் சட்ட விளக்கம் கூறி பறிமுதல் செய்யப்பட்டது சரியானது என வாதிடுவது முறை அல்ல. அது அடிப்படை ஜீவாதார உரிமையின் பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதும் சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர், வெளியிடப்பட்டுள்ள சில பகுதிகள் அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் காட்டப்பட்டுள்ள மாதிரி தெய்வீகத் தன்மை வாய்ந்த இராமன், சீதை ஜனகன் முதலியவர்களை இழிவுப்படுத்தும் விதத்திலும் உத்திரப்பிரதேசத்தில் வாழும் இந்துக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையிலும் இருப்பதால் கோர்ட்டார் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

எங்கள் கடமை

நாங்கள் அவருடைய வாதத்தை ஆராயுங்கால் ஜீவாதார உரிமைகள் விலங்கிடப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனையும், எந்த அடிப்படை உணர்வுகளால் உந்தப்பட்டு உத்திரப்பிரதேச அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும்.

நமது இந்திய நாடானது மதச்சார்பற்ற நாடு. எந்த ஒரு மதத்தினையும் தழுவியது அல்ல. இந்த நாடானது எந்த ஒரு மக்களின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படுவதல்ல. ஆனால், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டம், ஒழுங்கு இவற்றை நிலைநாட்டுவதிலும் நாட்டங்கொண்டு அக்கறை கொண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு வகுப்பு மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும்படியான தூண்டும்படியான சொற்களைப்பற்றிக் கவலைக் கொண்டு, மூர்க்கத்தமான செயல்களை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு அரசும் அமைதியையும், பாதுகாப்பையும் கட்டிக்காப்பது அவசியம், அப்படி அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எந்த ஒரு வடிவிலோ பங்கம் ஏற்பட்டு ஆபத்து விளையுமேயானால் அந்த அரசு நீதித்துறையை நாட வேண்டியுள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு தவறல்ல

எங்கள் முன்னால் உள்ள அந்த மேன்முறையீட்டு வழக்கை, சட்ட ரீதியாகவும் பார்க்கின்ற நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது அல்ல. பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இது சம்பந்தப்பட்ட பிரச்னையைப் பல்வேறு விதங்களில் முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளது. தனிப்பட்ட ஒரு மனிதன் மீது கடுமையான நடவடிக்கை, அல்லது தடை சட்டத்தின் மூலம் கொண்டுவரப்படுமேயானால், அதனால் எற்படும் குற்ற விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 ஏ ஏற்படுத்திய அறிஞர்கள், அரசிற்கு முன்னேற்பாடான அதிகாரங்களை வழங்கி உள்ளார்கள், சட்ட ரீதியாகச் சொல்லப்பட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியக் குடிமக்களின் இரு சாராரிடையே பகைமையை வளர்க்கும், அல்லது ஒரு மதத்தினரின் உணர்ச்சியைப் புண்படுத்தும் வெளியீடுகள் இருக்குமேயானால், சட்ட ரீதியாக அரசு இதனை உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட இந்தப் பிரிவு நிர்ப்பந்திப்பதும் அல்லாமல் 99 ஏ எந்தக் காரணத்திற்காகப் பறிமுதல் செய்யப்படுகிறது என்பதனையும் விளக்க வேண்டுமென உரைக்கிறது. எந்தக் காரணத்திற்காக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதனை கண்டிப்பாக விளக்கப்பட வேண்டுமென சட்டம் நிர்ப்பந்திப்பதால், காரணத்தை விளக்காமல், அரசு அறிவிப்பாணையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வது கூடாது.

சட்ட ரீதியாக ஒரு பிரச்சனை கட்டாயமாக்கப்படுமேயானால், நிர்பந்திக்கப்படுமேயானால், அதன் பிரகாரம் அரசு செயல்பட்டே தீரவேண்டும், சட்டரீதியாக ஒரு வெளியீட்டை ஒரு மாநில அரசு பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்குமேயானால், அது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல. மிகவும் கவனாமாகச் செயல்பட வேண்டுமென்பதனை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரச்னைகள் விடுபட்டால் சட்டம் செயலிழந்துவிடும்

இதுபோல பிரச்னைகளில் ஏதாவது ஒன்று விடுபடுமேயானால், சட்டம் அங்கு செயலிழந்துவிடுகிறது.

மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு நாம் திரும்பி வருகிறபோது, மக்களின் உரிமைகளை உன்னிப்பாகக் கவனிப்தோடு, பாதுகாக்கப்படுவதும் முறையானதாகும் சட்ட ரீதியாக இப்படித்தான் செய்லபட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படும்போது, அப்படிச் செய்யாமல் செயல்பட்டுவிட்டு விளக்கங்கள் கூறுவது தகுதியானதும் முறையானதும் அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 சி படி பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்து தடை உத்தரவைத் தகர்க்க மனு கொடுக்கும் நேரத்தில், அரசு எந்தக் காரணத்திற்காக செயல்பட்டிருக்கிறது என்பதனைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளித்தல் முறையானதாகும்.
நீதிமன்றம் அரசு அறிவிப்பாணையில் உள்ள கருத்துகளைக் கொண்டு கவனித்து, தனது எல்லைக்கு அப்பாற்பட்டு விளக்கமான விசாரணை செய்ய இயலாது, சட்ட ரீதியாகச் சில சலுகைகள் தனிப்பட்ட ஒருவருக்குக் கொடுப்பதற்குச் சட்டம் குறிப்பிட்ட அளவு இடமளிக்குமேயானால் அதனைத் தடை செய்ய, வெளியீட்டை தடை செய்ய அதிகாரம் யாருக்குமில்லை.
நாங்கள், தடைசெய்யப்படுபவரின் கருத்தை விரிவாக எடுத்துரைத்து செயல்பட வேண்டுமெனச் சொல்ல வரவில்லை. சில வழக்குகளில் குறிப்பாகச் சொல்லப்படுமேயானால், அதுவே போதுமானது. மற்ற வழக்குகளில் விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சொல்லப்படாமல், விடப்படுமேயானால் அந்த ஆணை முறையானது அல்ல.

தனி மனித உரிமை பறிக்கப்படக் கூடாது

தனி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை பறிக்கப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 99 ஏ-யைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. தேச நலனைப் பாதுகாப்பதற்குத் தனி மனித உரிமை கட்டுப்படுத்த வேண்டுமென்பதில் அய்யமில்லை.

தனி மனித சுதந்திரத்தைப்பற்றி கோட்பாடுகள், அரசியலமைப்பில் குறிக்கப்படும்போது காரணம் பொருந்திய கட்டுப்பாடுகளை விதித்துத் தானிருக்கிறார்கள்.

குற்றமுறை பிரிவு 99 ஏ ஏற்படுத்தப்படும்போது அரசியலமைப்பை கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அமைதியைக் காப்பதற்காக புது ஆணை பிறப்பிக்கப்படும்போது தனி மனித உரிமைபற்றிக் கவலைகொள்ளாமல் மூடத்தனமான கொள்கைகள் தடை செய்யப்பட வேண்டும். அந்த மாதிரியான வெளியீடுகள் சமுதாயத்தில் வெளியிடப்படுமேயானால், பொதுமக்களின் அமைதியையும் நன்மையையும் முன்னிட்டு தடை செய்யப்படுதல் அவசியம்.
கண்மூடித்தனமான, மூடத்தனமான கொள்கைகள் கண்டிக்கப்பட்டு பயமில்லாமல் வெளிக்காட்டப்படுமேயானால் முற்போக்கான எந்த ஒரு மாநில அரசும் முற்போக்கான பொருளாதாரக் கொள்கையையோ மேற்கண்டவாறு பயமில்லாமல் வெளிக்கொணரப்பட்ட செய்திகளையோ தடை செய்யக்கூடாது. இது தான் குற்றமுறை 99 ஏ பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கும் செய்தியாகும்.

தடை செய்வதானால் காரணகாரியத்தோடு விளக்கம் வேண்டும்

நம்முடைய அரசியல் அமைப்பு இந்த மாதிரியான பாராட்டத்தக்க கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த காரணத்தினால் கடமை தவறாது, சட்ட ரீதியாக அது கவனிக்கப்பட வேண்டுமென்பதே ஆகும்.
சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வெளியீட்டையும் தடை செய்ய அதன்மூலம் பொதுமக்களின் அமைதியைக் காக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே, குற்றமுறை 99 ஏ பிரிவின் நிர்வாகம் செயல்பட தடை செய்யப்பட வேண்டிய விஷயத்தை காரண காரியங்களோடு விளக்கப்பட வேண்டுமென்பதேயாகும். அரசின் அறிவிப்பாணை இம்முறையில் இருந்து தவறியிருக்குமேயானால் அது பிறப்பிக்கப்பட்ட ஆணையின் குற்றமேயாகும்.
முடிவாக நாங்கள் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் தன்மைபற்றி ஆராயவில்லை. மூடத்தனத்தில் ஊறிப்போன சிலருக்கு வளர்கின்ற சில கொள்கைகள் நகைப்பிற்குள்ளாக்குவதாக இருக்கலாம்.

அம்மாதிரியான சிலர் சுவாமி விவேகானந்தரின் எங்களுடைய மதம் அடுப்பங்கரையிலும், எங்களுடைய தெய்வம் பானைகளாகவும் இருப்பதால் எந்த மதமும் என்னைத் தொடுவதற்கு அருகதையற்றதாக இருக்கிறது என்ற சொல்லும், நான் புனிதத் தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பண்டித ஜவகர்லால் நேரு தன்னுடைய (Discovery of India) என்ற புத்தகத்தில் பக்கம் 339-ல் மேற்கோளாகக் காட்டப்பட்ட செய்திகளும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லலாம். பொதுமக்களின் நன்மையை முன்னிட்டு சில தடைகள் விதிக்கப்படுவதால் தனி மனிதனுக்கு நெருக்கடி நேரத்தில் விதிக்கப்படும் தடைகளைப்பற்றி குறிப்பிடவில்லை. அப்படியில்லாத நேரத்தில் காலத்தில் விதிக்கப்படும் தடைகளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறோம். முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டுப் புத்தகத்தைப்பற்றி, மாநில அரசு தடை விதிக்கவேண்டிய காரண காரியங்களை குற்றமுறை பிரிவு 99 ஏ பிரகாரம், நிர்பந்திக்கப்படுவதால் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

குற்றமுறை பிரிவு 99 ஏ பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஒவ்வொரு மாநில அரசும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி இருப்பதால், அதனைப்பற்றி தெளிவான விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவானது பல தரப்பட்ட சமுதாயத்தையும் பல தரப்பட்ட மதத் தன்மையையும், பகுத்தறிவுவாதிகளையும், கண்முடித்தனமான மூடநம்பிக்கைக் கொண்டவர்களையும் கொண்டுள்ளது. எந்த ஒரு மாநில அரசும் இதனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு வெளியீட்டையும் தடை செய்யும்போது முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தாது என நம்புகிறோம்.

இந்த ஒரு நடைமுறை தடையானது நெருக்கடி பிரகடனத்திற்கு முற்பட்டதாக இருப்பதால், இந்த அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்.

Monday, November 12, 2007

டிசம்பர் 9 :புதுச்சேரியில் தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை

தமிழ் மொழி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அறிவியல் துறையில் தமிழ்ப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிற மொழியில் உள்ள கலைச் சொற்கள் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டு தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ச்சியின் உச்சம் இன்றைக்கு கணினியின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், கணினியில் தமிழ்ப் பயன்பாடு போதிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். முறையாக கணினிப் பயின்றவர்கள்கூட கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரிந்திருப்பதால் தமிழில் கணினி தொழில் நுட்பங்களை அறிந்திருக்கிறார்கள் என்றோ, பயன்படுத்துகிறார்கள் என்றோ கூறிவிட முடியாது.

தமிழ்க் கணினி என்பது முதலில் நம் கணினியைத் தமிழ்க் கணினியாக்குவது. அதாவது, கணினியின் இயங்குதளங்களைத் (Operating Systems) தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, பரவலாக்குவது. அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவது. இரண்டாவது, கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது.

ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு போன்ற பிற மொழிகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கணினியில் படிக்க முடியும். தமிழை அவ்வாறு படிக்க முடியாத நிலை இருந்தது. ‘ஒருங்குறி’ எழுத்து (Unicode Font) வந்த பின் இந்த நிலை மாறி உலகம் முழுவதும் தமிழில் படிக்க முடியும், எழுத முடியும் நிலை உருவானது.

தற்போது, தமிழ் ஒருங்குறி எழுத்து வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒருங்குறி தமிழ் எழுத்தைப் பயன்படுத்திட போதிய தொழில் நுட்ப அறிமுகமோ, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழர்களிடம் போதுமானதாக இல்லை. எத்தனைத் தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் விடுவோமனால் அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற நோக்கம் நிறைவேறாது.

இணைய உலகில் வலைப்பதிவுகள் (Blogs) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணினியும் இணைய இணைப்பும் மட்டும் இருந்தால், வேறு செலவு ஏதுமின்றி, ஒருவர் தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்று வலைப்பூக்கள் மாற்று ஊடகத்திற்கு வலு சேர்த்து வருகிறது. இதில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படுகிறது. கதை, கவிதை, குறும்படம், திரைப்பட விமர்சனம் என இலக்கியப் படைப்பும், விவாதங்களும் நிகழ்த்தப்படுகின்றன.

இதுபோன்று கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்குப் போதிய பயிற்சி இன்றியமையாதது. இந்நோக்கத்தை நிறைவேற்றவே “தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. இதில் காலை அமர்வுகள் தமிழ்க் கணினி குறித்ததாகும். அதாவது, நமது கணினியை முழுக்க முழுக்க தமிழில் இயங்கச் செய்வது.

மதியம் அமர்வுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியதாகும். குறிப்பாக தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பூக்களில் தமிழில் எழுதுவது போன்றவற்றை எளிமையாக செய்திட தேவையான மென்பொருட்களை அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது.

மாலை நிறைவு விழாவோடு பயிற்சிப் பட்டறை நிறைவடைகிறது.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

இப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய மலர் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிப் பட்டறையில் 100 மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கணினிப் பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

எனவே, பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - பதிவகம்

இணையப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.

பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதும்.

பயிற்சிப் பட்டறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கீழ்க்காணும் தளத்தில் வெளியிடப்படும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

அனைத்து தொடர்புகளுக்கும்:

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைபதிவர் சிறகம்.

உலாபேசி: + 91 94431 05825
மின்ன்ஞ்சல்: rajasugumaran@gmail.com

Friday, October 12, 2007

தினமணி - தமிழ்நாட்டுக்கும் இராமருக்கும் பூணூல் பாலம்..

தினமணி நாளிதழ் தன் நடுநிலையை இழந்து ஒரு சார்பாக போய்விட்டது என்று என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். எனக்கும் சமீபகாலமாய் அந்தக் கருத்து உருவாகி இருந்தது.

பத்திரிகை உலகின் தன்னிகரற்ற மனிதராக விளங்கிய அய்யா திரு.இராம.திரு.சம்பந்தம் அவர்களுக்குப் பிறகு தினமணி தன் நடுநிலையை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருகிறது என்பது தினமணி வாசகர்களில் பெரும்பான்மையினர் கருத்தாக உள்ளது.

கிராமப்புறங்களில் "ரெக்கார்டு டான்ஸ்" என்கிற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெறுவதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதில் பாடல்கள் இசைக்கப்படும், மேடையின் மீது ஒன்று அல்லது இரண்டு பெண்கள் நடனமாடுவார்கள். இசையின் வேகத்திற்கு ஏற்ப தான் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி எரிவார்கள். ஒருகட்டத்தில் கழற்றி எரிய ஆடை இல்லாமல் அம்மணமாய் நிற்கும் போது. வேறு வழியின்றி விளக்குகள் அணைக்கப்படும். நிகழச்சி முடிவடையும். பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது சட்டென எனக்கு நினைவுக்கு வந்தது தினமணி நாளிதழ்தான்.

மொழியுணர்வுத் தீப்பந்தமாய் இருந்த நம் அய்யா சம்பந்தம் அவர்கள் தினமணிக்கு - ஆடைபூட்டி அழகு பார்த்தார். இப்போது கடைசியாய் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துபடங்கள் என எழுதி வேறு வழியின்றி விளக்குகளை அணைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டுக்குள் பத்திரிகை விற்று அந்த பணத்தில் வாழும் இவர்கள் தமிழ் நாட்டின் 100 ஆண்டுகால கனவுத் திட்டத்தை எதிர்க்க வடநாட்டு கும்பலோடு கைகோர்த்து, இராமர் பாலம் வழியாக ராமராஜ்ஜியம் அமைக்க புதியதாக கிளம்பி உள்ளார்கள்.

தினந்தோறும் பரப்பும் பொய்யுரைகளுக்கு பதிலளித்தால் நாம் வேறு வேலை பார்க்க முடியாது (அவர்களுக்கு இதுவே வேலை). நாம் பார்க்கும் வேலையின் நடுவே இளைப்பாறுதல் தான் இது போன்ற பதிவுகள். "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று கூறுவார்களே, அது தற்போது நடந்துள்ளது. தினமணியே உங்களின் நிலையைத் தெளிவாக அறிவித்தற்கு மிக்க நன்றி.

மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஏற்க செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி. தந்தை பெரியாரோ, பேரறிஞர் அண்ணாவோ, தமிழக முதல்வர் கலைஞரோ "கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி" என்று கூறுவது தன் வீட்டில் உள்ளவர்களை விலக்கி அல்ல, அவர்களையும் உள்டக்கித்தான். " வீட்டை திருத்தி விட்டு நாட்டுக்கு வா" என்கிறீர்கள். மகிழ்ச்சி, எங்கள் வீடும் நாட்டுக்குள் தான் இருக்கிறது. பிரச்சாரம், அறிவுரை எல்லாம் எங்கள் வீட்டில் உள்ளவர்க்கும் சேர்த்துதான்.

"இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகியவை சமுதாயத்தின் அருமை பெருமைக்கு ஆதாரமாக உள்ளது" தினமணியின் கண்டுபிடிப்பு. இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். சூத்திரன் சம்பூகன் தவம் செய்வதைக் கண்ட பார்ப்பனர்கள், மனுதர்மப்படி சூத்திரனுக்கு அந்த தகுதி கிடையாது என்று இராமனிடம் முறையிட இராமனோ சம்பூகன் தலையை கொய்து விடுகிறான். இது தான் இராமனின் பண்பாடு. சூத்திரன் படித்தால் நாக்கை அறு, படிப்பதை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று எனக்கூறுவது மனுதர்ம பண்பாடு. மனுமர்மத்தை உயர்த்தி பிடிக்கும் இராமனை, அத்வானியும் இல.கணேசனும் வைத்திய நாதன்களும், துக்ளக் சோ-க்களும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடலாம், அவர் வழி நடக்கலாம். சூத்திர கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் அவசியமில்லை.

இறை மறுப்பு இயக்கம் இந்தியாவிலும் மட்டுமல்லாது உலக நிலையிலும் தோல்வியைக் கண்டுள்ளது என்று " தினமணி" கூறுவது தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது. மனிதனின் பரணாம வளர்ச்சியை கூறும் டார்வின் தத்துவத்தை கத்தோலிக்க மதகுரு போப் ஜான்பால் (கடந்த முறை பதவி வகித்தவர்) கருத்தியல் ரீதியாக ஏற்றுக்கொன்டார் என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழகத்தில் பெரியாருக்கு பிறகு பக்தி அதிகமாகி விட்டதாக கூறுகின்றீர்கள், சரி ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். இராமரையும் அவரது பாலத்தையும் பாதுகாக்க, குரல் கொடுக்க, வடநாட்டு அத்வானியும், சோ, இல.கணேசன், இராமகோபாலன், வைத்தியநாத அய்யர்களை தவிர வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை. காரணம் பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம்.

இந்தியாவின் உயர்ந்த பீடமாக கருதப்பட்ட "லோக குரு" காஞ்சி - சங்கராச்சாரியாரை கைது செய்தபோது சங்கரமடத்தின் பக்கத்து தேநீர் கடை கூட மூடப்படவில்லை. இதுதான் உங்கள் நிலை தமிழகத்தில்.


எந்தவொரு பகுத்தறிவாளனும் கோயிலுக்குள் சென்று கொலை செய்தது கிடையாது. அடுத்த மதத்துக்காரனை உயிரோடு எரித்தது கிடையாது. அவனது வழிபாட்டுத்தளத்தை இடித்தது கிடையாது. "கடவுள் இல்லை" என்று கூறும் ஒருவரால், ஒரு கோயிலுக்கோ, ஒரு மசூதிக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டிடருக்கமா? அன்பை போதித்த 8000 சமணர்களை கழுவேற்றி கொன்ற பெருமையுடையதுதான் உங்கள் இறை நம்பிக்கை.

சேது சமுத்திர திட்டம் என்பது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் ஓர் அற்புதமான திட்டம். சுமார் பத்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு, வேலைவாய்ப்பை பெருக்கி தென்னகத்தை முன்னேற்றும் என்பது மறுக்க இயலா உண்மை.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றபட வேண்டுமா? அல்லது இந்துமத உணர்வுகளை தூண்டி விட்டு தமிழகத்தின் வளம் கொழிக்கும் திட்டத்தை கெடுக்க வேண்டுமா? என்பதை மக்கள் மன்றத்திடம் விடுவோம். அவர்கள் முடிவு செய்யட்டும். அதுவரை இராம பக்தர்கள் பஜனை செய்யுங்கள், இராமராவது தமிழ்நாட்டு மக்கள் மனதில் புகுந்து மாற்றம் செய்வாரா? பார்ப்போம். கடவுள் இருந்தால் தனது பாலத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் உங்களுக்கு ஏன் கவலை?

Saturday, October 6, 2007

சேது சமுத்திரத் திட்டம்... இராமரும்... அவரின் பாலமும்...

தமிழர்களின் நூற்றாண்டு கனவாக இருந்த சேது சமுத்திரத் திட்டம், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால், தமிழர் டி.ஆர்.பாலு அவர்களின் உழைப்பால் நிறைவேற போகும் வேளையில் இராமர் பாலத்தைக் காப்பாற்று என கூக்குரல்கள் எழுப்புகிறவர்கள். யாரென்று பார்த்தால் இந்து என்று சொல்லி உழைக்கும் மக்களை ஏமாற்றி வரும் இந்து மதவெறி கூட்டம். இவர்கள் என்ன கூறுகிறார்கள், இந்துக்களின் வரலாற்று நாயகன் இராமன் கட்டிய பாலத்தை உடைக்கலாமா? இது அநியாயம், அராஜகம் என்று பூனூல் கும்பல், இந்து என்று கூறி நம் தோள் மேல் ஏறி நின்று கூப்பாடு போடுகின்றது.

சரி வரலாற்றுக்கு ஆதாரமாய் (?) விளங்கும் கண்ணுக்குத் தெரியாத இராமன் பாலத்தை உடைப்பதை எதிர்க்கும் இவர்கள் நம் கண்முன் பாபர் மசூதியை உடைத்தவர்கள் தானே. இயற்கையாய் உருவான மணல் திட்டு, இராமன்பாலம் அது எங்கள் நம்பிக்கை, எனவே அதை உடைக்க கூடாது என்றால் மனிதர்களால் கட்டப்பட்ட பாபர் மசூதி கூடத்தான் இந்த நாட்டின் குடிமக்களில் பலரது நம்பிக்கை. ஏன் உடைத்தீர்கள்? என்று கேள்விகள் எழுப்புவோமானால் எங்கள் நம்பிக்கைக்கு எதிராய் எவர் வரினும் அவர் காந்தியே, ஆனாலும் வாழவிட மாட்டோம் என்று கொக்கரிகிறார்கள். இவர்களின் இராமனும், அவன் பாலமும் கற்பனையே என தொல்லியல் ஆய்வுத்துறை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூற கொதித்தெழுந்த கூட்டம், அதிகாரிகளைப் பணி நீக்கம் செய், பிரதமரும், சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறிகிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கை இந்த இந்து மதவெறி கூத்தில் மறைக்கப்படும் கொடுமையைக் கண்டு நெஞ்சம் கொதிக்குது. சரி இவர்கள் கூறும் இராமனையும், இராமன் பாலத்தையும் பற்றி உண்மையைப் பற்றி கொஞ்சம் பார்போம்.

இராமாயணம் நடந்த கதையல்ல!

இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் வரலாறு இல்லை; உள்ள கதை அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல்லோகம் என்றம் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரத்துக்கு வழியும் இல்லை.

இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள் பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?

தேவலோகத்தில் என்றால், அங்கிருந்து பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?

இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்திரிப்பதே இராமாயணம்.

இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தாமனதோ, நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு பெரும்கற்பனைச் சித்திரமும் அல்ல.

அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணாச்சியையும், அக்கால ஆரியப் பண்பாடு பழக்க, வழக்கம் முதலிய அவர்களது அன்றைய காலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.

இராமாயணக் காலம் பொய்!

இராமாயணம் நடந்த காலம் இராமாயணப்படி திரேதாயுகம், துவாபரயுகம் இவ்விரண்டிற்கும் முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே, இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்து இன்றைக்கு 2550 ஆண்டுகள் தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப்பற்றி திரேதாயுகத்தில் (21,00,00 ஆண்டுகளுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன பற்றி ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:

(வால்மீகி இராமாயணம் - சி.ஆர்.சீனிவாசய்ங்கார் மொழிபெயர்ப்பு)

இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் இராமன் கேட்கும்பொழுது, பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அயோதித்தி காண்டம் 100 ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)

இராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கம் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடபட்டுள்ளது.

(மேற்படி காண்டம் 106 ஆவது சர்ககம்; 412 ஆவது பக்கம்)

சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்குச் சற்று தூரத்திற்கப்பால் புத்தர் ஆலயம்போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.

(சுந்தர காண்டம் 15 ஆவது சர்ககம் 69 ஆவது பக்கம்)

வாலியிடம் இராமன் கூறும்பொழுது பூர்வத்தில் ஒரு பவுத்தசன்யாசி உன்னைப்போல் கொடிய பாவத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

(கிஷ்கிந்தா காண்டம் 18 ஆவது சர்க்கம்; 69 பக்கம்)

இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது, வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள், புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின்மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்...முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும் கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் காட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 6 ஆவது சர்க்கம்; 23,24, ஆவது பக்கம்)

21 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப் பற்றி கூறுகிற செய்தியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனால் இராமாயணக் காலம் (திரேதா யுகம்) என்பது பொய்யேயாகும்.

கடற்பெரு வெள்ளங்களால் தென்னாட்டில் இருந்து இலங்கை பிரிந்து 5,000 ஆண்டுகளே ஆகின்றன!


இதுவரை இவ்வுலகத்தில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் (சுனாமி) காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெரு வெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூற்றாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும்; நான்காவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்தாவது வெள்ளம் ஒன்பதினாயிரத்து அய்நூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாமென்றும் அறியக் கிடக்கின்றன.

இப்பெருவெள்ளங்களின் காரணமாகப் பல நிலப்பரப்புகள் நீர்பரப்பாயும், நீர்ப் பரப்புகள் நிலப்பரப்பாயும் மாறினவென்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த பல நாடுகள் நீரினுள் மறைந்தனவென்றும் அறியக் கிடக்கின்றன.

இவை எக்கேல், அக்கிசிலி, டோயினார்டு, பேர்கசன், சுவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக் கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப் பழைய காலத்தே நடந்ததாகத் தெரிய வருவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வடமேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும், வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் இராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.

சுமார் கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தமிழ் நாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.

காலஞ்சென்ற ஆசிரியர் கார்த்திகேய முதலியார், குமரியாற்றுக்கும், பஃறுளியாற்றுக்கும் இடையிலுள்ள பெருவள நாடே பழந்தமிழ்நாடாகும். இது பெரியதொரு ஆற்றிடைக் குறையாதலின், இதற்கு அலங்கமென்றும் பெயராம், அலங்கம் லங்கையாயிற்று. அலங்கமெனினும் ஆற்றிடைக் குறையெனினும் ஒக்கும். இலத்தீன் மொழியில் இலங்கைக்கு டாப்ரோபேன் என்று பெயர். டாப்ரோபேன் என்பது தாமிரபரணி என்பதன் சிதைவு. கடல் கோளுக்குட்படாமுன் இலங்கைக்கு இப்பொழுது தென்பாண்டி நாட்டில் ஓடும் தாமிரபரணியின் பாய்ச்சலிருந்தமையால் அப்பெயர் வந்தது. என்று அவர் இயற்றிய அரியமொழி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டவருக்கும் பெருமையைக் கொடுப்பதொன்றாகும். காட்எலியட் என்பவர் கூறிய அய்ந்தாவது கடல் வெள்ளம் ஏறக்குறைய 9,500 ஆண்டுகளுக்கு முன்னேயே நிகழந்ததாகும். அங்ஙனமாயின் யாவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட முச்சங்கங்ளின் முதற்சங்கம் இக்கடல் வெள்ளத்துக்குமுன் குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த நாட்டில் நிறுவப்பட்டதாகும். இச் சங்கத்தை நிறுவிய மன்னர் காய்ச்சினவழுதி முதல் கடுங்கோன் மன்னர் வரை எண்பத்தொன்பது மன்னர் ஆவர்.

ஆராய்ச்சி உண்மை இவ்வாறு இருக்கையில், 21 லட்சம் (21,00,000) ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தீவும், அயோத்தி நாடும் இருந்ததாகக் கூறும் இராமாயணக் கதை எவ்வளவு பெரிய பொய்க் கதையாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.


தொடரும்...

Friday, October 5, 2007

இராமனின் சின்னப் புத்தி - கிஷ்கிந்தா காண்டம் சர்ககம்-1

தம்பீ வா! நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள்!

அந்தரங்க மித்தரனான லட்சுமணன் சமீபத்திலிருந்தாலும் விரகதாபம் மேலிட்டு இந்திரிய சவாதீனமற்று பிரலாபித்தார்... (பக்கம் 2)

காமம் வாட்டுகிறதே!

சீதையை விட்டுப் பிரிந்து தவிக்கும் என்னைப் பலவித பட்க்ஷிகளும் மிருகங்களும் சப்திக்கும் வசந்த காலம் அதிகமாக வாட்டுகிறது. (பக்கம் 4)

இங்கேதான் இன்பம் அனுபவித்தோம்!

முன்னொரு சமயத்தில் சீதை ஆசிரமத்தில் இருக்கும் பொழுது இந்த பட்க்ஷியின் சப்தத்தைக் கேட்டு ஆசைமிகுந்த என்னை அழைத்துப் பலவிதமான இன்பங்களை அனுபவித்தாள், ஆகையால் அவளை விட்டுப் பிரிந்த பிறகே இது இவ்வளவு துக்கத்தைத் தருகிறது.” (பக்கம் 5)

தகுந்த நேரத்தில் கவர்ந்து சென்றானே!

நாம் நகரத்திலிருக்கும் பொழுது இராவணன் சீதையை எடுத்துப் போகாமல், ஏகாந்ததத்தில் பரம சுகங்களை அனுபவிக்கத் தகுந்த இந்தக் காட்டில் வந்திருக்கும் பொழுது எடுத்துப் போனானே. (பக்கம் 6)

அவளுடன் சுகிப்பவனே பாக்கியசாலி!

இப்படிப்பட்ட அழகிய தேசங்களிலும் காலங்களிலும் பிரிய நாயகியுடன் இஷ்டபோகங்களை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள். (மேற்படி பக்கம்)

என்னைப் பார்த்தாலே சேர்ந்து சுகம் கொடுப்பாள்!

என்னைப் பார்த்தால் உண்டாகும் ஆனந்தத்தால் மலர்ந்த கண்களுடன் சீதையும் இப்படியே என்னைச் சேர்ந்து சுகத்தைக் கொடுப்பாள் அல்லவா?” (பக்கம் 7)

பட்க்ஷிகளைப் பார் என் காமத்தை வளர்க்கிறது!

பட்க்ஷிகள் சந்தோஷமேலிட்டு விளையாடுவதற்கு ஒன்றை ஒன்று கூப்பிடுவதைப் பார்த்தால் எனக்கு ஆசையை வளர்ப்பதற்கே இப்படிச் செய்கின்றன என்று எண்ணுகிறேன். (மேற்படி பக்கம்)

வசந்த ருதுவில் யாரிடமும் வசப்பட்டுவிடுவாளோ!

ஜானகி இருக்குமிடத்தில் வசந்தகாலம் உண்டானால் அவளும் பிறர்க்கு வசப்பட்டு என்னைப்போல துக்கப்படுவாளல்லவா? அவளைக் கொண்டுபோய் வைத்திருக்குமிடத்தில் ஒரு வேளை வசந்த ருது உண்டாகாது. அவளிருக்குமிடத்தில் வசந்த ருது உண்டென்றே ஒன்புக்கொண்டாலும் பிறரால் பயமுறுத்தப்பட்டு துன்பப்படுகையில் அவள் என்ன சுகத்தை அனுபவிப்பாள்?” (மேற்படிபக்கம்)

சீதையிடம் சுகம் கண்டாலொழிய உயிர்வாழேன் சீதையிடம்!

அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன. இந்த பம்பை நதியில் அடிக்கும் சகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்கமாட்டேன்.

குறிப்பு: இவ்விதம் இராமன் சீதையின் மீது காமம் கொண்டு கதறுகிறான். அதுவும் யாரிடம்? தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ அதைத் தன் தம்பியிடம் கூறுகிறான். மனிதப் பிறவியில்கூட யாராவது இப்படிக் கூற கேட்டிருக்கிறோமா? அதிலும் தன்னுடைய தம்பியிடமே இந்த விஷயங்களைக் கூறுகிறவன் கடவுளின் அவதாரம் என்பதாகக் காணமுடியவில்லை. இதனால், பார்ப்பனர்கள் கடவுளர்களின் யோக்கியதை, அவதாரங்களின் அநாகரிகம், பார்ப்பனப் பழக்க வழக்கங்கள் முதலியன விளங்குகின்றன.

இராமன் ஒரு இடத்தில் நான் அயோத்தியில் இருக்கும் போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானேஎன்ற கருத்தில் துக்கப்படுகிறான்.

ஆகவே, இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கி சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது. பாலம் அமைத்து மீட்டிருக்க மாட்டான் என்பதும் தெரியவருகிறது. மேலும் இராமன் காட்டுக்கு வந்தது; சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வந்திருப்பான் என்றும் தெரிகிறது.

இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்தரித்து எழுதுவதால், கடவுளுக்கும், கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள்.

ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள் எப்படியெனில்:

அவர்கள் குறிப்பிடும் காலக் கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம். லட்சம் சதுர்யுகம், கேரி சதுர்யுகம் என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

தாசிகள்கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.

ஆண்களைப் பலாத்காரம் செய்த விபசாரிகளையும் பதிவிரதை லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்கள்.

மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.

10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறுகோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.

இப்படியாக, இவை போன்ற ஏராளமான பொய்கள், புனைச் சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.

(மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்த்த வால்மீகி இராமாயணத்தில் உள்ளது)

தொடரும்...

Saturday, September 29, 2007

இந்துமத வெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து சவப்பாடை ஊர்வலம்


பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 28-09-2007 அன்று, புதுச்சேரியில், இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து, சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறியன் வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டனர். ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Thursday, September 13, 2007

புதுச்சேரி, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் தந்தை பெரியார் 129-ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் திராவிடர் கழகத்தின் கோட்டைமேடு கிளை சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம், வரும் 17-09-2007 திங்களன்று அரியாங்குப்பம், கோட்டைமேட்டில் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்த நாள் வரும் 17-09-2007 திங்கள் அன்று தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பெரியார் தி.க. கோட்டைமேடு கிளை சார்பாக, தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் வரும் 17-09-2007 திங்கள் மாலை 6-00 மணிக்கு, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டத்திற்கு கோட்டைமேடு பெரியார் தி.க. பொறுப்பாளர் இரா.பெருமாள் அவர்கள் தலைமையேற்கிறார். ந.இரவி, சி.சிவமுருகன், ச.தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில இளைஞர் அணிச் செயலாளர் செ.சுரேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகின்றார்.

திரைப்பட நடிகர், கலைமாமணி திரு.குமரிமுத்து (தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க.) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுகின்றார்.

பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

மேலும் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி துணைத் தலைவர் இரா.வீராசாமி, பொருளாளர் வீரமோகன், செயலாளர் சு.விசயசங்கர், அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, இளைஞரணித் தலைவர் சா.சார்லசு, துணைச் செயலாளர் கோ.இராசேந்திரன், துணைச் செயலாளர் சிவராந்தகம் மு.சிவபெருமாள், மற்றும் பெரியார் தி.க.வின் பல்வேறு பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். நிகழச்சியின் இறுதியில் நன்றியுரை இரா.இராசசேகர் அவர்கள் கூற விழா நிறைவடைகிறது.

Tuesday, September 11, 2007

சேலம் ரயில்வே கோட்டம்...மீண்டும் அரங்கேற பார்க்கும் துரோகம்...


தமிழ்நாட்டு உரிமைக்காக தன் உயிரைத் துறக்கத் துணியும்
சட்டக் கல்லூரி மாணவர் - பெரியார் தி.க. செயல்வீரர் பன்னீர்செல்வம்.


சேலம் ரயில்வே கோட்டம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் 50 ஆண்டுகால கோரிக்கை இது. தமிழகத்தில் இயங்கிய போத்தனூர் ரயில்வே கோட்டம், தமிழர்கள் குறட்டை விட்டு தூங்கியதால், நம் கண் முன்னே பாலக்காடு ரயில்வே கோட்டமாகி நிற்கும் கொடுமையை என்ன வென்று சொல்வது.

இந்திய அரசு தமிழர்களின் தயவில் இருப்பதால் பல நன்மைகள் கிடைத்து வருகின்றது. அவைகளில் ஒன்று தான் சேலம் கோட்டம் அமைத்தது. நீண்ட நெடிய போராட்டத்திற்குபின் அதுவும் குறிப்பாக பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மக்களை அரசியல் இயக்கங்களை, திரட்டும் பணியில் ஈடுபட்டு அதில் இன்று முழு வெற்றியும் கண்டுள்ளார். சேலம் கோட்டம் அமைவதை எதிர்த்த மலையாளிகள் அதிலும் குறிப்பாக கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுôனந்தன், கேரளாவிற்கு எதிராக தமிழகம் கிளர்ந்தெழவதைக் கண்டு, புத்திசாலித்தனமாக, "சேலம் கோட்டத்தை எதிர்க்கவில்லை, அமைத்துக்கொள்ளுங்கள், கோவை திருப்பூரை பாலக்காடு கோட்டத்தில் இருக்க வேண்டும்" என ரொம்ப பெருந்தன்மையோடு கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள சின்ன சின்ன ரயில்வே நிலையங்கள் கூட அனைத்து வசதிகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களான கோவை-திருப்பூரில் கூட அத்தகைய வசதி கிடையாது. தற்போதுள்ள நிலைகூட குறிப்பாக 96-க்குப் பிறகு தான் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசில் நமது தமிழககட்சிகள் பங்கு பெற்ற பிறகு தான் இத்தகைய மாற்றங்கள் உருவானது என்பது மறுக்க இயலா உண்மை.

சேலம் ரயில்வே கோட்ட விவகாரத்தில் மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரும். சேலம் ரயில்வேகோட்ட பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஒருங்கிணைந்து கேரளாவிற்கு எதிராக "சேலம் கோட்டத்தை தடுக்கும் கேரளாவிற்கு செல்லும் ரயில்களை தடுப்போம், சேலம் கோட்டத்தை வர விடாமல் செய்யும் மலையாளிகளுக்கு செல்லும் பொருட்களை தடுப்போம்" என போராடிவரும் வேளையில் கேரளாவிற்கு ஆதராவாகவும் தமிழ்நாட்டிற்குள் சில குரல்கள். "இப்படி செய்தால் ஒருமைப்பாடு கெட்டுப் போகாதா? இரு மாநிலங்களுக்கிடையே பகைமை வளராதா? நாமெல்லாம் இந்தியர்களில்லையா? உழைக்கும் மக்களில்லையா" என குறுக்கு சால் ஓட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தை தந்திரமாக ஏமாற்றி வருகிறார்கள். சேலம் கோட்டப் பாதுகாப்புத் தலைவர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு...

இந்தியாவை, அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 1 2 3 இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை தெளிவாக எதிர்ககும் மார்க்சிஸ்டுகள்,
கோவை-திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டு தொழில்நகரங்களை
கேரளாவிற்கு அடிமையாக்கும் நிலையை ஆதரிப்பது ஏன்?
இந்தியாவிற்கு ஒரு அஜென்டா..
கேரளாவிற்கு அஜென்டா..

இதைத்தான் பெரியார் சொல்வார்
"தலைக்கொரு சீயக்காய் தாடிக்கொரு சீயக்காய்"

Thursday, September 6, 2007

கோவில் நுழைவுப் போராட்டம் ; வரலாற்று உண்மைகள்

கோவில் நுழைவுப் போராட்டம் பற்றிய தவறான செய்திகள்கடந்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றது. கோவில் நுழைவுப் போராட்டம் முதன்முதலாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்தான் நடந்தது என்றும், கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி மதுரை வைத்தியநாத அய்யர்தான் என்றும் உண்மைக்கு மாறான செய்தியை ஒரு கூட்டம் பரப்பிவருகின்றது.

தந்தை பெரியார் தனது ஆரம்ப காலம் தொடங்கி மறையும்வரை சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வை ஒழிக்கின்ற வகையில் பாடுபட்டு வந்தார் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக, கோவிலில் நிலவி வந்த சாதியத் தீண்டாமை ஏற்றத் தாழ்வை ஒழிக்கும் பொருட்டு தந்தை பெரியாரும் அவர்தம் சுயமரியாதை இயக்கமும் நடத்திய போராட்டங்களை யாரும் எளிதில் மறுத்துவிடவோ, மறைத்திடவோ முடியாது.

தினமணி ஸ்தாணுநாதன் எழுதிய வரலாறு படைத்த நிகழ்ச்சி என்ற கட்டுரையில் மதுரை வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் அருணன், “கடம்பவனம்” என்னும் நாவலை மார்ச் 2001-ல் வெளியிட்டு இருந்தார். அந்த நாவலில் “கதையின் கதை” என்ற தலைப்பில் முன்னுரை எழுதிய அருணன், “மீனாட்சி கோவில் ஆலயப் பிரவேசம் முதலில் மிகச் சாதாரண நிகழ்வாகப்பட்டது. சிந்திக்க சிந்திக்க மிகஅபூர்வமான விஷயமாக எழுந்தது” என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுக் கிளர்ச்சியை அறிமுகம் செய்கிறார்.

தன்னுடைய போக்கிலேயே கதை சொல்லி வந்த அருணன், கோவில் நுழைவுக் காட்சியைப் பற்றி விவரிக்கும்போது, “வெளியே திரண்டிருந்த மக்களிடம் மீனாட்சி கோவிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்து விட்டதாக அய்யர் அறிவித்தார். கூட்டம் பிரமாதமா கைதட்டி வரவேற்றது” என்றும், “அது நடந்தது என்றால் வரலாற்றிலேயே அப்போதுதான் நடந்தது. தமிழகத்தில் வேறெங்கும் இன்னும் நடக்காதது கடம்பவனத்தில் (மதுரையில்) நடந்தது.” (பக்:33) என்றும் எழுதுகிறார். தமிழகத்தில் முதன் முதலில் கோவில் நுழைவுப் போராட்டம் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்தியதுதான் என்று தினமணியும் திட்டமிட்டு பரப்பி வந்த புரட்டை, பொய்யான வரலாற்றை தோழர் அருணன் அவர்களும் வழி மொழிந்துள்ளார். மேலும், தீண்டாமையை ஒழித்து, எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கச் செய்திடவே மதுரை வைத்தியநாத அய்யர் உண்மையோடு, உணர்வோடு அந்தப் போரட்டத்தை நடத்தினார் என்ற வகையில் அருணன் கடம்பவனம் நவாலில் பல செய்திளை எழுதியுள்ளார்.

ஆனால், எஸ்.வி.இராசதுரை, பேராசிரியர் தொ.பரமசிவன். முனைவர் கோ.கேசவன் ஆகிய ஆய்வாளர்கள் மதுரை கோவில் நுழைவுக் கிளர்ச்சி பற்றிய தங்களது ஆய்வுகளை வெளியிட்டு உள்ளனர். அவர்களுடைய ஆய்வின்படி “காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் காங்கிரசில் இராஜாஜியா? சத்தியமூர்த்தியா? (காமராஜர்) என எழுந்த கோஷ்டி மோதலில் இராஜாஜியின் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ளவும், நெருங்கி வந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் ஆகியோரின் உற்ற துணைவன் காங்கிரஸ்தான் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் செய்கையாகவே மதுரை வைத்தியநாத அய்யரின் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது”

இப்படி வரலாற்றுத் திரித்து எழுதும் திரிபுவதிகளின் முகமூடியைக் கிழிக்கவும், கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி பெரியாரும் அவரின் சுயமரியாதை இயக்கமும் அதன் தோழர்களுமே என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துவோம். கோவில்கள் என்பது மனிதனை இழிவுபடுத்தும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற சாதி வித்தியாசத்தை நிலைநிறுத்தும் இடமாகவும், பார்ப்பனார்கள் மட்டும் பாடுபடாமல் சோம்பேறித்தனமாக வயிறு வளர்க்க, பார்ப்பனர்கள் அல்லாதாரின் பொருளைக் கொள்ளை அடிக்க ஏற்ற இடமாகவும் இருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் சாதி வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ள இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவமான வர்ணாசிரம தர்மத்தை சத்தமின்றிப் பரப்பக்கூடிய பிரச்சார நிறுவனமாகவும் கோவில் விளங்கி வருகிறது.

கோவில் கருவறைவரை ஒரு சாதியும், உட்பிரகாரம் வரை ஒரு சாதியும், கொடிமரம் வரை ஒரு சாதியும், சுற்றுச்சுவருக்கு வெளியே ஒரு சாதியும் இருந்து வழிபாடு செய்யக்கூடிய நிலைதான் அன்று இருந்து வந்தது. இந்து மத வர்ணாசிரம தர்மத்தின்படி, பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரகர்கள், ஆகியோர் மேற்கண்டபடி கோவிலின் குறிப்பிட்ட எல்லைக்குள்தான் வழிபாடு நடத்த உரிமையிருந்தது. ஆனால், சூத்திரரில் சில பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் தீண்டப்படாதோர் கோவிலில் நுழைந்து வழிபாடு நடத்த உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. கோவிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டு கோவிலுக்கு வெளியே இருந்து கோபுரத்தை மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்த கூட்டம், இன்றைக்கு கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை பெற்றது எப்போது? யாரால்? பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சார்தாலும், போராட்டத்தாலும்தான் தாழ்த்தப்பட்ட, தீண்டப்படாத மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு கோவில் நுழைவுக்கான உரிமைப்போர் முன்னெடுக்கப்பட்டது.

பார்ப்பன இந்து மதத்தால் தாழ்த்தப்பட்டோர், தீண்ட்ப்படாதோர், என ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குச் சமூக விடுதலைப் பெற்றுத் தருவதே பெரியாரின் லட்சியமாக இருந்தது. அன்று காங்கிரசில் இருந்த பெரியார் இந்த இழிவினை போக்க 1922-ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் கோவில் நுழைவுப் பொது உரிமைகள் வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் பார்ப்பனர்களால் புறக்கணிக்கப்பட்டது.. அப்போதே கோவில் நுழைவு உரிமைக்கானப் போராட்டத்தை பெரியார் தொடங்கிவிட்டார்.

கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள பாதையில் தாழ்த்தப்பட்டோரும், தீண்டப்படாதவர்களும் நடப்தைக் தடுத்த கொடுமை 1924-ல் நடந்தது. பொது இடமான கோயிலுக்கு அருகில் உள்ள சாலைகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன.

ஒரு கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. போராடிய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியாரை போராட்டக் குழுவினர் அழைத்தனர்.

போராட்டத்திற்குத் தலைமையேற்ற தந்தை பெரியார் வைக்கத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். அதனாலேயே தந்தை பெரியார், வைக்கம் வீரர் எனப் புகழப்பட்டார்.

வைக்கம் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியின்றி பேச்சு வார்த்தைக்கு வந்தார் திருவிதாங்கூர் ராணியார். ராணியார் பெரியாரிடம் நேரடியாகப் பேசினால் பெரியாரின் புகழ் உயர்ந்து விடும் என்று பொறாமை கொண்ட ராஜாஜி, பேச்சு வார்த்தைக்கு காந்தியை அழைத்து வந்தார். ஆக 1924-ஆம் ஆண்டில் வைக்கத்தில் மீண்டும் கோவில் நுழைவு உரிமைகக்ககான முழக்கத்தைத் தந்தை பெரியார் முன் வைத்தார்.

“பொது இடங்களான கிணறு, சாலை, கோவில் போன்ற இடங்களில் பொது உரிமை இருக்க வேண்டும். தனித் தனியான உரிமைகள் கூடாது. இந்த உரிமைகள் மறுக்கின்ற இடங்களில் உரிமைகளைப் பெற வேண்டி போராட வேண்டி இருக்கும்” என்பதை தந்தை பெரியார் தனது அறிக்கைகளிலும் உரைகளிலும் பிரகடனப்படுத்தினார். வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுசீந்தரத்தில் தீண்டப்படாதார் கோவில் நுழைவுக் களர்ச்சி 1925-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது.


“நமது நாட்டிலே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப்பட்டவர்கள், கண்ணில் தென்படக்கூடாதவர்கள், தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள், தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதவர்கள் என எத்தனையோ இலட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும், பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக் கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந்நிலையில் நமக்கு சுயராஜ்யமும் விடுதலையும் அத்தியாவசியாமா? என்பதைப் பொது மக்களே சிந்தக்க வேண்டும்.

சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சம்துவத்தை நிலை நாட்டுவதற்கேயாகம். தமிழ்நாட்டினர், வைக்கம் சத்தியாகக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும் ஒத்தாசை செய்தார்களோ, அவ்வாறே சுசீந்திரம் சத்தியாகிரகத்திற்கும் தாங்கள் நன்கொடையளித்தும், ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்” என மேற்கண்டவாறு சுசீந்திரம் கோவில் நுழைவு கிளர்ச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்து அறிக்கை ஒன்றை தந்தை பெரியார் தனது குடி அரசு (31-01-1926) மூலம் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்டினார்.

1927-ஆம் ஆண்டில் ஜே.என்.இராமநாதன் தலைமையில் பல தாழ்த்தப்பட்ட தோழர்கள் திருச்சி தாயுமானவர் கோவிலில் நுழைந்தனர். அவர்கள் மலைக்குப் படியேறிச் சென்றபொழுது பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த ரவுடிகளால் அடித்துத் தள்ளப்பட்டு, பாறைகளில் உருட்டி விடப்பட்டனர். ஜே.என்.கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலை கோவிலில் நுழைந்தவர்களை கோவிலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டனர். அவர்கள் மீது வழக்கும் போடப்பட்டது.

1927-ஆம் ஆண்டு மே மாதத்தில் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட அனைத்துச் சாதியினரும் மயிலாதுறை மயூரநாதர் கோவிலில் நுழையச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட கோவில் நிர்வாகிகள் கோவில் நுழைவாயிலையும் கருவறையையும் பூட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருப்பினும் பக்கவாட்டுக் கதவுகள் மூலமாக தோழர்கள் கோவிலினுள் நுழைந்தனர்.

அடுத்த ஆண்டு 1928-ல் திருச்சி மலைக் கோட்டையிலும் (25-06-1928) திருவானைக்காவிலும் (12-08-1928) கோவில் நுழைவுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்போரட்டங்களில் பங்கு பெற்ற தோழர்கள் குண்டர்களால் பலமாகத் தாக்கப்பட்டனர்.

1929-ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடத் தோழர்களையும் அனுமதிக்கக வேண்டும்” என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தந்தை பெரியார் முன்னிறுள்ளார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்றுள்ளார்.

பெரியார் கோவை சென்றதும், பெரியார் துணைவியார் நாகம்மையார் துணையுடன் குத்தூசி குருசாமி அவர்கள் கமிட்டியின் தீர்மானத்தை நடைமுறைபடுத்த துணிந்தார். குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் உள்ளிட்ட ஈரோடு கச்சேரி வீதி, ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து, முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று தேங்காய், பழம், பூ, ஆகியவை அடங்கிய தட்டுடன் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தார். குத்தூசி குருசாமி தனது தோழர்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததைக் கண்ட பார்ப்பனர்கள் அந்தச் செய்தியை ஊரெங்கும் பரப்பிவிட்டனர்.

பொது மக்களின் துணையோடு குத்தூசி குருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்பொழுதே வெளிக்கதவை இழுத்து மூடி பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் கோவிலின் பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிட்டனர். அந்த இரண்டு நாட்களிலும் குத்தூசி குருசாமியும் மற்ற தோழர்களும் கோவிலுக்குள்ளேயே இருந்துள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பின் தந்தை பெரியார் கோவையில் இருந்து வந்தார். அதற்குப் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமியும் மற்ற தோழர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இது பற்றிக் கூறும் போது, அந்த இரண்டு நாட்களும் நாங்கள் அன்னை நாகம்மையார் அளித்த உணவு உண்டு பசியாறினோம். ஆனால் கடவுளான ஈஸ்வரன் தான் பட்டினிகிடக்க நேரிட்டதுஎன்று குத்தூசி குருசாமி வேடிக்கைகயாககக் குறிப்பிட்டுள்ளர்.

குத்தூசிகுருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைக் கண்டித்து தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பொறுப்பிலிருந்து தந்தை பெரியார் விலகினார்.

நாடார்கள் மற்றும் தாழ்த்ப்பட்டோருக்கு கோவில் நுழையும் உரிமை அளிக்க வேண்டும் என்றும் அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும் ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும்என்று தந்தை பெரியாரால் 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானத்தை ஆட்சேபித்து சத்தியமூர்த்தி அய்யர், மதுரை வைத்திய நாத அய்யர். கும்பகோணம்பந்தலு அய்யர், ஆகியோர் கூச்சல் போட்டுகுழப்பம் விளைவித்து, பெரும் கலகத்தையே உருவாக்கி அத்தீர்மானத்தை ஓட்டுக்கு விடாமல் அத்தீர்மானத்தின் சாரமான கோவில் நுழைவு உரிமையின் உயர்நாடியை அழித்து விட்டனர்.

1922-ஆம்ஆண்டு கோவில் நுழைவு உரிமைக்கு எதிராக கூப்பாடு போட்ட மதுரை வைத்தியநாத அய்யர் தான் கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று தேசியத்திலகங்கள் எல்லாம் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

வைத்தியநாத அய்யரின் வருணாசிரம வெறியை வரலாறு பறைசாட்டுவதை மறைத்து விட்டு மனுதர்மவாதிகள் அவரை "அரிஜனத் தந்தை" என்ற அடைமொழியோடு பொய் வரலாற்றைப் புனைந்து எழுதுகிறார்கள்.

1922-ஆம் ஆண்டு கோவில் நுழைவு உரிமைக்கு எதிராக இருந்த மதுரை வைத்தியநாத அய்யர் 1939-ஆம் ஆண்டு மதுரை கோவிலில் நுழையும் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அன்று இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? அவரைஅந்தப் போராட்டம் நடத்தக் தூண்டிய காரணி எது?

17-ஆண்டுகளில் வைத்தியநாத அய்யரின் மனநிலை மாற்றம் அடைந்து தீண்டாமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து விட்டாரா? அதன் பின்னர் தீண்டாமைக் கொடுமையை அழிப்பதை தன் வாழ்நாளின் முக்கிய பணியாகச் செய்தாரா? இல்லை. இல்லவே இல்லை.

ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் "பெரியார் மரபும் திரிபும்" என்ற நூலில் üசுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவுகருவறை நுழைவுப் போராட்டங்கள் என்ற தலைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த போராட்டம் பற்றி கூறியிருப்பதைப் பார்ப்போம்.

üüஅப்போது நடக்கவிருந்த மதுரை ராமநாதபுரம் ஜில்லாபோர்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கருத்தில் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேர கடைசி பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைந்து, தேசிய பத்திரிகைகளின் பெரும் ஆரவாரமிக்க அங்கீகாரம், ராஜாஜியிலிருந்து காந்திவரையிலான தேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆககியவற்றைப் பெற்றுக் கொண்டார். பெரியாரால் "குள்ளநரி" என்று அழைக்கப்பட்ட மதுரை ஏ.வைத்தியநாதய்யர் தாழ்த்தப்பட்டோருக்கு கோவில் நுழைவு உரிமை என்பதை 1922-ல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதை üüதிரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்துýý தெரிந்து கொள்ளலாம்.

"இனாம் குடிகளின் உரிமையையும் இனாம்தாரி, ஜமீன்தாரி,ஒழிப்பையும்" எதிர்த்தவரும் இவர்தான் மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாதய்யர் நடத்தி வைத்த üநுழைவுý கூட அப்போது அக்கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும்இசைவின் பேரிலுமே சாத்தியமாற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததின் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோவிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான், (குடிஅரசு 16-07-1939) (நகரதூதன் 16-07-1939)
குறுகிய அரசியல் இலாபத்திற்காக, தாழ்த்தப்பட்டோரின் உயிரான உரிமைப் பிரச்சனையை பகடைக் காயாக பயன்படுத்தி விளையாடிய, மதுரை வைத்தியநாத அய்யர் கோவில் நுழைவுப்போராட்டத்தின் முன்னோடி என்று கூறுவது அயோக்கியத்தனமானது என்பதை வரலாற்று ஆய்வுகள் நிரூப்பிக்கின்றது.ஆனால், குத்தூசி குருசாமி நடத்தியகோவில் நுழைவுப் போராட்டம் என்பது, ஏற்றுக் கொண்ட கொள்கை வழிப்பட்ட போராட்டம்.
ஏற்றத்தாழ்வை ஒழித்து சம உரிமைபெற வேண்டி நடந்த சமதர்மப் போராட்டம். உண்மையான உணர்வோடு, உறுதியான உந்துதலோடு ஒடுக்கப்பட்டோரின் உரிமை பெற நடந்த போராட்டம்.

தன் வாழ்நாள் முழுவதும் அந்த உரிமைப் போருக்குத் தன்னையே ஒப்படைத்த சுயமரியாதைப் போராளியின் எழுச்சிப் போராட்டம்.எந்த இலாபத்தையும் எதிர்பாராமலும், உள்நோக்கம் இல்லாமல், தாழ்த்தப்பட்ட, தீண்டபடாத மக்களின் சுயமரியாதையை வென்றெடுக்க நடந்த போராட்டம்.

சாதி,மத,கடவுள் பெயரால் கடைபிடிக்கக்பட்ட தீண்டாமைக் கொடுமையைஅடித்து நொறுக்கிய ஆதிக்க ஒழிப்புப் போராட்டம்