மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் வரதராஜன் அவர்கள் தன்னுடைய அரிய கண்டுடிப்புகளைப் பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக அவ்வப்போது அறிவிப்பது உண்டு. "இந்த வார கண்டுபிடிப்பை" கோவில்பட்டி பொதுக் கூட்டம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
"சினிமா நடிகர்களும், வைகோ போன்றவர்களும் மேடையில் முழக்கமிடுவதால் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது" - இது தான் அந்த கண்டுபிடிப்பு.
ஈழத்தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராகவே எப்போதும் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஈழத்தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவுக் கரங்களை தமிழ்நாட்டு மக்கள் பெரிய அளவில் நீட்டி தங்களது இன உணர்வை வெளிப்படுத்தி வருவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஆற்றாமையில், எதிர்த்து பேசினால் மக்களிடம் அம்பலப்பட்டுப் போவோம் என்ற பயத்தில் சுற்றி வளைத்து தங்களது நச்சுக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தமிழர், இன உணர்வு, ஈழத்தமிழர் ஆதரவு ஆகிய சொற்கள் எப்போதுமே மார்க்சிஸ்டுகளுக்கு வேப்பங்காயாக கசக்கும். காரணம் கட்சியின் அதிகார மட்டம் முழுதும் நிரம்பியிருக்கும் பூனூல் "மார்க்சிஸ்டுகள்."
"மேடைகளில் முழக்கமிடுவதால் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது"- எனக் கூறும் வரதராஜன் அவர்களே, உங்களுக்கு நன்றி. தாங்களும், தங்கள் கட்சியினரும் மேடைகளில் முழக்கமிடுகிறீர்களே...மற்ற பிரச்சனைகளான விலைவாசி பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுமா? தொழிலாளர் குறைகளுக்குத் தீர்வு கிடைத்திடுமா? மின் வெட்டுக்கு தீர்வு உருவாகுமா? விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வருமா? மாணவர்களின் உரிமைக் கோரிக்கைகள் தீர்வுக்கு வழிகிடைக்குமா? பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதா? சிறு குறு தொழில்களைக் காப்பாற்ற தீர்வு கிடைக்குமா? மக்கள் கேட்கிறார்கள்.
மேடைகளில் முழக்கமிடுவதால் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்றால், நீங்கள் எங்கள் தமிழர்களிடம் வீதி, வீதியாக சென்று வசூல் செய்து மேடைப் போட்டு அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதாக முழங்கி வருகின்றீர்களே! அதை என்னவென்று சொல்லி அழைப்பது?
எங்கள் ஊரின் தேநீர் கடைகளில் அரசியல் பேசிக் கொள்ளும் சாதாரண மனிதன் உங்களின் செயலுக்கு வைத்துள்ள பெயர் "மொல்லைமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம்."
வரதராஜன் போன்ற மார்க்சிஸ்டுகளின் உண்மையான நோக்கம் இலங்கைக்குப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதல்ல. தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி ஒலிக்கும் ஈழப்பிரச்சனைக் குறித்த கருத்துப் பிரச்சாரத்தை எப்படியாவது முடிந்த வரை கொச்சைப்படுத்துவது, வாய்ப்புப் கிடைத்தால் தடுத்து நிறுத்துவது.
நிச்சயம் உங்களுக்கு அந்த வாய்ப்பை நாங்கள் வழங்கவே மாட்டோம். மேலும், தமிழகத்தின் வீதிகளில் இப்போது தினமும், சமூகத்தின் ஏதாவது ஒரு பிரிவினர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம், தொடர்முழக்கம் எனப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வாய்ப்புக் கிடைக்கும் போதொல்லாம் தமிழ்நாட்டுக்கும், தமிழனுக்கும் துரோகம் செய்வதையே தங்களது கொள்கையாக கொண்டுள்ள வரதராஜ மார்க்சிஸ்டுகள் ஏதாவது கூறி இந்தப் போரட்டங்களைத் திசை திருப்ப முடியுமா? என ஆராய்ச்சி செய்து இது போன்ற அரிய கண்டு பிடிப்புகளை அறிவித்து வருகின்றார்கள்.
பெரியாறு பிரச்சனையா? நெய்யாற்று சிக்கலா? இப்படி பல்வேறு சிக்கலில் கேரளாவின் அடாவடிகளுக்கு ஆதரவாய், இருந்து கொண்டு, எதிர்த்து வாய் திறக்காத வரதராஜ மார்க்சிஸ்டுகள், தமிழனுக்குப் பிரசங்கங்கள் வழங்கும் நவீன கதாகாலச்சேப நடிகர்களாக மாறிவருகின்றனர்.
மேற்படி கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் "தோழர்" வரதராஜன் அவர்கள் "தமிழகத்தில் ஊழல் பெருச்சாளிகள் அதிகரித்து விட்டனர்" என கூறியுள்ளார். அவரே பல்வேறு மேடைகளில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகளவில் மக்கள் இணைகிறார்கள்" என்றும் கூறியுள்ளார்.
இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று எனக்குத் தெரிவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.
5 comments:
இந்த மார்க்சிய பூனுலிஸ்டுகள் இப்படி செய்வதில் ஆச்சரியம் இல்லை. இது இவர்கள் காலம் காலமாக செய்து வருவது தான்,
இவர்களுக்கு ஒன்று பட்ட இலங்கை தான் நோக்கமாம் “ உண்மையில் இவர்கள் மார்க்சிய விரோதிகள் என்பது மார்க்சியம் படித்தவர்கள் அறிவார்கள், ஆனால் சாதாரண மக்கள் இவர்களில் செயல்களிலிருந்து இவற்றை அறிந்து கொள்கிறார்கள், இந்த மாதிரி தேசிய? முட்டாள் தனமான கருத்துக்களால் இந்த மார்சிஸ்டுகள் அம்பலப்பட்டே நிற்கிறார்கள்.
ஏற்கனவே பல்வேறு முட்டாள் தனமான கருத்துக்களால் 1986 காலகட்டத்தில் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர், கடந்த காலத்தில் தமிழகம் பெரும் ஆதவரை பெற்ற ஈழப்போராட்டத்தின் போதுதான் அது நிகழ்ந்தது, இந்த நிலைப்பாட்டை அப்படியே வைத்துக்கொள்ள சொல்லுங்கள் மேலும் அவர்கள் போண்டியாகலாம்,
பார்ப்பனிய செயலலிதா கட்சியில் உள்ள பலர் புலம்புவது போல அங்கும் பலர் புலம்பலாம் அல்லது வெளியேறலாம். காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.
அவாள் நமக்கு சவால் என்று கலைஞர் கூறியது சரியோ?
////பெரியாறு பிரச்சனையா? நெய்யாற்று சிக்கலா? இப்படி பல்வேறு சிக்கலில் கேரளாவின் அடாவடிகளுக்கு ஆதரவாய், இருந்து கொண்டு, எதிர்த்து வாய் திறக்காத வரதராஜ மார்க்சிஸ்டுகள், தமிழனுக்குப் பிரசங்கங்கள் வழங்கும் நவீன கதாகாலச்சேப நடிகர்களாக மாறிவருகின்றனர்.////
மாறி வரவில்லை!
இவரகள் எப்போதும் இப்படித்தான் இருந்து வருகிறார்கள்.
இவர்களைச் சரியாக அம்பலப்படுத்த வேண்டும்!
இவர்களின் உள்நோக்க உரைகளைத் தோலுரித்துக் காட்டவேண்டும்.
தமிழர்களுக்கும் பொதுவுடைமைக் கொள்கைக்கும் மாறான இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்!
வணக்கம் நண்பரே
வரதராஜனின் தாயார் இங்குள்ளவர், அவரது DADDY சிங்களவர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் என்னிடம் கூறினார். என்னால் அப்பொழுது நம்பமுடியவில்லை. இப்பொழுது அவர் கூறியது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு
நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அரசியல்வாதி என்பவன் குண்டர் படை வைத்துக்கொண்டோ அல்லது ஒரு நபரின் பிச்சைக்காசுக்காக தன்னை ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களை கண்டுகொள்ளாமல் அந்த ஒரு சில முதலாளித்துவ நபருக்கு நாயாக கிடப்பார்கள் என்று பல படங்களில் வரும்.
தன்னை நம்பி ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்த மக்களுக்கு எதிராக செயல்படும் சுயநலவாதிகள் இங்கு மார்க்சிச போர்வையில் பதுங்கி உள்ளனர் என்பது அவ்வப்பொழுது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதுரையிலே மதுரை மக்கள் தங்களுக்கு இவர் நன்மை செய்வார் என்று நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மார்க்சிய வேடத்தில் இருக்கும் ஒரு தமிழின விரோதி தமிழ்நாட்டில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக செயல்பட்டுள்ளான்.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்கள் நாங்கள் என்பதை தெளிவாக விளக்கிவிட்டார்கள் அந்த கட்சியினர்.
எந்த ஒரு நாட்டிலோ இப்படிப்பட்ட ஒரு தேசபக்தனை பார்க்க இயலுமா?
இவர்கள் பேசும் தேசியம் இதுதானா?
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருக்கும் ஒரு நபரே இப்படியென்றால் அவர் தலைமைகள் எப்படி இருக்கும் என்று சொல்லவே கூசுகிறது.
மேலும் காண... http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_26.html
Post a Comment