இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தில்லியில் 6-2-2008 புதனன்று பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன்,விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி, பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர்.
"இந்திய அரசே! ஈழத் தமிழர்களைக்
கொல்லும் இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!"
"எங்கள் இரத்தம், எங்கள் இரத்தம்,
ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்"
"தடையை நீக்கு, தடையை நீக்கு,
விடுதலைப் புலிகள் மீதான
தடையை நீக்கு, தடையை நீக்கு"
போன்ற முழக்கங்கள் தில்லியை கலக்கு கலக்கியது.
பேரணி, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் அவரது செயலாளரை நேரில் சந்தித்து தமிழக மக்களிடம் இருந்துப் பெறப்பட்ட 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து அடங்கிய மனுவை அளித்தனர்.ஈழத் விடுதலைப் போரின் நியாயத்தை சர்வ தேச சமுதாயம் உணர்ந்துக் கொள்ள உருவாகும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் வெற்றியாக மாற்றுவோம்.
7 comments:
Thozhar weldone
பேரணி நடத்தியோருக்கும் தகவலிட்ட உங்களுக்கும் வாழ்த்து.
இதயம் கனக்கின்றது. எங்கள் மீது அன்பு வைத்திருக்கும் உங்களுக்கு தமிழ் ஈழத்தை பரிசாக விரைவில் தருவோம்.
ஒரு ஈழத் தமிழன்
தில்லியின் தினசரி இது போல் எத்தனையோ, இதெற்கல்லாம் கலக்கிய என்று தலைப்பிடுவது வேடிக்கை.தமிழ்நாட்டின் 40 மக்களவை உறுப்பினர்களில் ஒருவர் கூட, சி.பி.ஐன் செயலாளர் ராஜா கூட
இதில் பங்கேற்கவில்லையே, ஏன்?.
மத்திய அரசில் பங்கேற்றுள்ள,
வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும்
கட்சிகள் நெருக்குதல் தராத வரை
மத்திய அரசு ஈழத்தமிழருக்கு ஆதரவு
நிலைப்பாடு எடுக்காது.இதுதான்
கசப்பான உண்மை.
நன்றி! நன்றி!! நன்றி!!!
பேரணியை ஒழுங்குசெய்த, கட்டமைத்த, கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!!
Anna you have done a good job.
-Latha
Post a Comment